சென்னை ரேஷன் கடைகளில் இன்று மக்கள் குறைதீர் முகாம்

சென்னை: பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் இன்று 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நடைபெறுகிறது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல், புதிய குடும்ப அட்டை விண்ணப்பம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத்திட்டத்தின் மூலம் குடிமக்கள் சேவைகளை உறுதி செய்யும் பொருட்டு தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, குறைகளைக் கேட்டுத் தீர்வு காணும் பொருட்டு மே மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் இன்று (14ம் தேதி) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.