ஜோடி மாற்றிய மா.கா.பா; விஜய் டி.வி-யை விட்டு போவதாக அறிவித்த பிரியங்கா; வீடியோ

விஜய் டிவி என்றாலே எத்தனை நிகழ்ச்சிகள் வந்தாலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு என்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சூப்பர் சிங்கர் சீனியர் ஜூனியர் என இரண்டு நிகழ்ச்சிகளையும் தொகுப்பாளர் மா.கா.பா. ஆனந்தும் பிரியங்காவும் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், சினிமா பாடல்களைத் தவிர, மா.கா.பா ஆனந்த்தும் பிரியங்காவும் அடிக்கும் நகைச்சுவை கவுண்டர் டயலாக்குகள் பார்வையாளர்களை சிரிப்பில் ஆழ்த்திவிடும். விஜய் டிவியின், இந்த கலப்பு இரட்டையர் ஆங்கர்கள் தனிப்பட்ட காரணங்களைத் தவிர எப்போது, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை சேர்ந்தே தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

வருகிற வாரத்துக்கான சூப்பர் சிங்கர் எபிசோடில், உலக இசை நிகழ்ச்சி தினத்துக்காக ஒரு சிறப்பு எபிசோடு நடத்தப்படுகிறது. இந்த சிறப்பு எபிசோடில், வெளிநாட்டு இசைக் கலைஞர்களும் பங்குபெறுகின்றனர். இந்த சிறப்பு எபிசோடுக்கு ரஷ்யாவில் இருந்து வந்த மீகாதான் இனி என் கோ ஹோஸ்ட்டர், இனி என் கோ ஹோஸ்ட்டர் பிகா (பிரியங்கா) இல்ல, மிகா என்று கூறுகிறார். இதைக் கேட்டு கடுப்பான பிரியங்கா, மீகா வந்தவுடனே இந்த பிகா-வை மறந்துட்டியா என்று கேட்கிறார். நான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை விட்டு போகிறேன் என்று நகைச்சுவையாகக் கூறுகிறார். ஆனால், மா.கா.பா மீகாதான் என் கோ ஹோஸ்டர் என்று கூறுகிறார்.

ரஷ்ய நாட்டு மீகாவும் மா.கா.பா -வுக்கு நல்லா கம்பெனி கொடுக்கிறார். அவரும் கோ ஹோஸ்ட்டராக இருக்க ரெடி என்று சொல்கிறார்.

மா.கா.பா-வும் பிரியங்காவும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை சூப்பராக ஆங்கரிங் செய்துவந்த நிலையில், மா.கா.பா ரஷ்ய பெண் மீகாதான் இனி கோ ஹோஸ்டர் என்று ஆங்கர் ஜோடியை மாற்றி இருப்பது இந்த வார நிகழ்ச்சியின் புரோமோவில் இடம்பெற்றுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உண்மையில், அந்த நிகழ்ச்சியில் என்ன நடந்தது என்ன என்பதை தெரிந்துகொள்ள இந்த வார சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி முழுமையாக ஒளிபரப்பாகும் வரை காத்திருப்போம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.