டெல்லி: டெல்லி மெட்ரோ ரயில் நிலையம் அருகே 3 அடுக்கு மாடி வணிக வளாகத்தில் தீவிபத்தில் 20 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. முந்தகா மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடந்த தீ விபத்தில் உயிரிழந்த 20 பேரின் உடல் மீட்டுள்ளனர். 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அனைக்க போராடி வருகின்றனர்.