புதுடெல்லி:
டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள வணிக வளாக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 26 பேர் உயிரிழந்தனர்.
பல வணிக நிறுவனங்கள் இயங்கி வந்த மூன்று மாடி கட்டட வளாகத்தில், மேல் தளத்தில் பற்றிய தீ மளமளவென அனைத்து தளங்களுக்கும் பரவியதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக 24 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. இந்த விபத்தில் உயிரிழந்த 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக டெல்லி தீயணைப்புத்துறை துணை தலைமை அதிகாரி சுனில் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
40க்கும் மேற்பட்டோர் தீக் காயங்களுடன் மருத்தவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். 70 பேர் மீட்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
வணிக வளாகத்தில் தீ பிடித்த நிலையில் தப்பிக்க நினைத்து பலர் மாடியில் இருந்து கீழே குதித்ததாக கூறப்படுகிறது. தீ கட்டுக்குள் வந்த நிலையில், மீட்பு பணிகளில் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
இதையும் படியுங்கள்..
.ஜம்மு காஷ்மீரில் பேருந்து தீப்பிடித்ததில் 4 பேர் பலி- 20 பேர் படுகாயம்