தமிழகத்தில் இன்று நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 4 மாணவர்கள் பிடிபட்டதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 3119 மையங்களில் பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த பொதுத் தேர்வினை 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 மாணவர்கள் எழுதுகின்றார்கள். இதில் 3 லட்சத்து 98 ஆயிரத்து 321 மாணவர்களும், 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 மாணவிகளும் அடங்குவர்.
ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக பொதுத்தேர்வுக்கு வராத மாணவர்களின் எண்ணிக்கை 6 முதல் 7 சதவீதம் வரை இருக்கும். உடல்நிலை பாதிப்பு மற்றும் விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாணவர்களால் பொதுத்தேர்வு எழுத முடியாத சூழல் உருவாகும்.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற பொதுத் தேர்வில் 31,403 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இன்று நடைபெற்ற தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 4 மாணவர்கள் பிடிப்பட்டதாகவும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.