தமிழுக்கு தலைகுனிவு என்றால் புதுச்சேரி அரசு ஏற்றுக் கொள்ளாது: ஆளுநர் தமிழிசை

ஜிப்மரில் தமிழ் இல்லை எனக் கூறி அதனை அரசியலாக்கி சிலர் தினமும் போராட்டம் நடத்தி நோயாளிகளுக்கு தொந்தரவு தருகிறார்கள் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டினார்.
புதுச்சேரி கம்பன் கழகம் சார்பில் 55 ஆம் ஆண்டு கம்பன் விழா இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. இதையடுத்து கம்பன் கலையரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு விழாவை தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
image
முன்னதாக விழாவில் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், கம்பன் வட மொழியையும் படித்து கம்ப ராமாயணத்தை எழுதியுள்ளார். தாய்மொழி தான் உயிர், அதை முழுமையாக படிக்காமல் பிற மொழியை திட்டுவது தவறு. பிற மொழி கற்பது தவறு இல்லை. தமிழ் விளையாடும் மாநிலமாக புதுச்சேரி விளங்குகிறது.
ஜிப்மரில் தமிழ் இல்லை எனக் கூறி அரசியலாக்கி சிலர் தினமும் போராட்டம் நடத்தி நோயாளிகளுக்கு தொந்தரவு தருகிறார்கள். தமிழுக்கு தலைகுனிவு என்றால் புதுச்சேரி அரசு ஏற்று கொள்ளாது. தமிழை உயிராய் ஏற்கும் நாம் பிற மொழியை நிந்திக்கக் கூடாது என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.