தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சேலம், தேனி, கோவை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், நாளை சேலம், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, வரும் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அம்மையம் கூறியுள்ளது. மேலும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 17ஆம் தேதி வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதியில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுவீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.