வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: திரைப்படங்களில் வருவதுபோல உடலில் தீப்பற்றி எரிய திருமண வரவேற்பு நடத்திய தம்பதிகளின் செயலால் அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.
இப்போதெல்லாம் திருமணத்தை பலரும் விதவிதமாக நடத்தி ஆச்சரியப்படுத்தி வருகின்றனர். ஆகாயத்தில், கடலடியில் என திருமணத்தை ரசித்து புதுவிதமாக கொண்டாடுவது இயல்பாகி வருகிறது. அந்த வகையில் ஒரு தம்பதி, அனைவரையும் அதிர்ச்சி மற்றும் ஆச்சரியப்படும் வகையில் திருமணம் செய்துள்ளனர். ஹாலிவுட் திரைப்படங்களுக்கு சண்டை பயிற்சி கலைஞர்களான (ஸ்டன்ட் மாஸ்டர்கள்) கேபே ஜெசாப் மற்றும் அம்பியர் ஆகிய இருவரும் திருமண வரவேற்பை நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி, திரைப்படங்களில் ஹீரோக்கள் நெருப்புடன் வருவது போன்ற காட்சியை போல, தாங்களும் உடலின் பின்புறம் தீப்படிக்க, தம்பதிகள் ஸ்டைலாக வருகின்றனர். பின்னர் தீ அணைக்கப்படுகிறது. ‛ஸ்டன்ட் மாஸ்டர்கள் திருமணம் செய்யும்போது’ என சமூக வலைதளத்தில் வீடியோவை பகிர்ந்துள்ளனர்.
இந்த சம்பவம் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என நெருப்புடன் திருமண வரவேற்பை நடத்திய இந்த தம்பதிகளின் செயலை சிலர் வரவேற்றும், விமர்சித்தும் வருகின்றனர்.
Advertisement