மும்பை தேசிய தொழில்நுட்ப தினத்தை முன்னிட்டு, உலகின் மிகப்பெரிய, ‘லிப்ட்’ மும்பையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.கடந்த 1998 மே 11ம் தேதி, வாஜ்பாய் தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்தபோது, ராஜஸ்தானின் பொக்ரானில், இந்தியா அணுகுண்டுகளை வெற்றிகரமாக பரிசோதித்தது.
200 பேர்
இத்திட்டத்திற்கு, அப்போது ஆராய்ச்சியாளராக இருந்த, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், தலைமை வகித்தார். இந்நிகழ்வை போற்றும் வகையில், ஆண்டு
தோறும் மே 11ம் தேதி, தேசிய தொழில்நுட்ப தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்., கூட்டணி ஆட்சி நடக்கும் மஹாராஷ்டிராவில், தேசிய தொழில்நுட்ப தினத்தை முன்னிட்டு, நேற்று உலகின் மிகப்பெரிய லிப்ட் அறிமுகம் செய்யப்பட்டு
உள்ளது.மும்பையில், பாந்த்ரா கர்லா வளாகத்தில் உள்ள ஜியோ சேவை மையத்தில் செயல்பாட்டிற்கு வந்து உள்ள இந்த லிப்ட், 200 பேர் வரை ஏற்றிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 277 சதுர அடி பரப்பளவு உடைய இந்த லிப்ட், 16 ஆயிரம் கிலோ வரை தாங்கும் திறன் உடையது.
புகழாரம்
இது, உலகின் அதிக எடை உடைய லிப்ட் என்ற பெருமையையும் பெற்று உள்ளது.இதற்கிடையே, தேசிய தொழில்நுட்ப தினத்தை முன்னிட்டு, 1998 பொக்ரான் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்திய இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டி உள்ளார்.
Advertisement