விழுப்புரத்தில் அதிகாலையில் நடைபெற்ற ஆட்டோ பந்தயத்தின் காட்சிகள் இணையத்தில் பரவிய நிலையில், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வியாழக்கிழமை காலை ஜானகிபுரம் பகுதியில் இருந்து மடப்பட்டு வரை, 18 கிலோ மீட்டர் தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலையில் இந்த பந்தயம் நடைபெற்றுள்ளது.
சென்னை மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த 5 ஆட்டோக்கள் பந்தயத்தில் பங்கேற்ற நிலையில், சென்னையைச் சேர்ந்தவருக்கு 10 ஆயிரம் ரூபாய் முதல் பரிசாகவும் வழங்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து விசாரணையில் இறங்கிய போலீசார், விழுப்புரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரைக் கைது செய்து, அவரது ஆட்டோவையும் பறிமுதல் செய்துள்ளனர்.