2020/2021 ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கு, பாடநெறிக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பொருத்தமான விதிகளின் கீழ் நாளை நடைபெறவிருந்த நேர்முகப்பரீட்சைகளை ஒத்திவைக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
நாட்டினுள் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலை காரணமாகவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.