பான் கார்டு மோசடிகள் அதிகரிப்பு.. கவனமாக இருப்பது எப்படி?

நிதி சார்ந்த பரிவத்தனைகள் செய்யும் போது பான் எண் என அழைக்கப்படும் நிரந்தர கணக்கு எண் முக்கியமான ஒன்று. 10 இலக்க எண்ணான இதில் பான் கார்டு உறுப்பினர் குறித்த விவரங்கள் இருக்கும்.

பான் எண்ணின் முதல் 5 டிஜிட் எழுத்துக்களாகவும், தொடர்ந்து 4 டிஜிட் எண்களாகவும் இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக இந்த பான் எண்ணை வைத்து பல மோசடிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. உதாரணத்துக்கு இந்த மோசடியாளர்கள் பான் எண்ணின் உரிமையாளர் அனுமதி இல்லாமல் அவர்கள் பெயரில் கடன் வாங்கும் மோசடிகள் நடைபெறுவதாகக் கூறுகின்றனர்.

மீண்டும் அதல பாதாளம் நோக்கி செல்லும் ரூபாய்..ஏன்.. 3 முக்கிய காரணங்கள் இதோ!

எனவே பான் கார்டு மோசடிகளிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்வது எப்படி என விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.

தேவையான போது பயன்படுத்துவது

தேவையான போது பயன்படுத்துவது

பான் எண்ணை வங்கி டெபாசிட் உள்ளிட்ட பாதுகாப்பான பரிவர்த்தனைகள் செய்யும் போது மட்டும் பயன்படுத்த வேண்டும். எல்லா செயலிகளிலும் கடனுக்கு பணம் வேண்டும் என்பதற்காக பான் எண்ணைச் சேர்க்கக் கூடாது.

பெயரும், பிறந்த தேதியும்

பெயரும், பிறந்த தேதியும்

பாதுகாப்பற்ற இடங்களிலும், இணையதளங்களிலும் உங்களது முழு பெயர் மற்றும் சரியான பிறந்த தேதியை வழங்காதீர்கள். இதை பயன்படுத்தி உங்கள் பான் எண்ணை ஐஆர்எஸ் இணையதளம் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.

பான் கார்டு, அசல் மற்றும் நகல்

பான் கார்டு, அசல் மற்றும் நகல்

உங்கள் பான் கார்டு அசலை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும். பான் கார்டு நகலில் கையெழுத்திடும் போது கவனமாக இருக்கவும். அது சரியான நபரிடம் தான் அளிக்கப்பட்டதா என்பதை உறுதி செய்துகொள்ளவும்.

கிரெடிட் ஸ்கோர்
 

கிரெடிட் ஸ்கோர்

உங்கள் கிரெடிட் ஸ்கோரை அவ்வப்போது சரிபார்க்கவும். மோசடியாக கடன் பெற்று இருந்தால் அதில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். வங்கி நிறுவனங்கள் ஆண்டுக்கு ஒரு வரை கிரெடிட் ஸ்கோரை இலவசமாகச் சரிபார்க்கும் சேவையை வழங்குகின்றன.

போன்

போன்

உங்கள் போனில் பான் எண்ணை சேமித்து வைத்து இருந்தால் அதை உடனே நீக்கிவிடவும்.

படிவம் 26A

படிவம் 26A

உங்கள் பாண் எண் தவறாக யாரும் பயன்படுத்தவில்லை என தெரிந்துகொள்ள வருமான வரி இணையதளத்தில் உள்ள படிவம் 26A-ஐ பதிவிறக்கம் செய்து செக் செய்யலாம். உங்கள் பான் எண்ணை பயன்படுத்திச் செய்துள்ள எல்லாம் பரிவர்தனை குறித்த விவரங்களும் அதில் பதிவேற்றப்பட்டு இருக்கும்.

நிதி பதிவுகள்

நிதி பதிவுகள்

பேடிஎம், பாங்க் பஜார் தளங்களில் உள்ள உங்கள் நிதி பதிவுகளை செக் செய்வதற்கான சேவையில், உங்கள் பான் எண், பெயர், பிறந்த தேதி போன்றவற்றை அளிக்கும் போது அதில் உங்கள் பெயரில் பெறப்பட்டுள்ள எல்லா கடன் விவரங்களைப் பார்க்க முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: pan card

English summary

How To Keep Safe Your PAN Card Safe From Scams?

How To Keep Safe Your PAN Card Safe From Scams? | பான் கார்டு மோசடிகள் அதிகரிப்பு.. கவனமாக இருப்பது எப்படி?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.