மேற்கத்திய ராணுவ கூட்டமைப்பான நோட்டோவில் எந்தவொரு தாமதமும் இல்லாமல் உடனடியாக இணைய வேண்டும் என அந்த நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போரானது உலக நாடுகளை பல்வேறு பொருளாதார மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு தள்ளியிருக்கும் நிலையில், ரஷ்யாவின் மிக நெருங்கிய மற்றொரு அண்டை நாடான பின்லாந்து மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நோட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்து வருகிறது.
இதுதொடர்பாக பின்லாந்தின் ஜனாதிபதி Sauli Niinistö மற்றும் பிரதமர் Sanna Marin இணைந்து வெளியிட்ட கருத்தில், எந்தவொரு தாமதமும் இல்லாமல் நோட்டோவின் ராணுவ கூட்டமைப்பில் பின்லாந்து விரைவாக இணைய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் பல ஆண்டுகளுக்கு பிறகு நார்டிக் நாடுகளின் அணி சேராக் கொள்கையில் இருந்து வெளியேறி பின்லாந்து எடுத்து இருக்கும் முக்கிய வரலாற்று முடிவு இது என இருவரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நோட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைவது பின்லாந்தின் ராணுவ பலத்தை மேலும் அதிகரிக்கும், ஆனால் இதுதொடர்பான முடிவை எடுப்பதற்கு இன்னும் சில முக்கிய முடிவுகள் ஒரிரு நாள்களுக்குள் எடுக்கப்படும் என நாங்கள் நம்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்கு பிறகாக பின்லாந்து மக்களிடன் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், நோட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்து கிட்டத்தட்ட 76 சதவிகத மக்கள் ஆதரவும், எதிராக 12 சதவிகித நபர்களும் கருத்துகள் தெரிவித்துள்ளனர்.
கூடுதல் செய்திகளுக்கு; உக்ரைனுக்கு வழங்கும் ஒவ்வொரு உதவியும்…அனைவருக்கும் பேரழிவை தரும் என ரஷ்யா எச்சரிக்கை
ராணுவ கூட்டமைப்பில் இணையும் பின்லாந்தின் முடிவிற்கு சுமுகமான மற்றும் விரைவான அனைத்து உதவிகளையும் நோட்டோ செய்யும் என தெரிவித்துள்ளது.
ஆனால் நோட்டோவின் 30 உறுப்பி நாடுகளும் அனுமதியை வழங்க நீண்ட நாள்கள் எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 810 மைல்கள் ரஷ்யாவுடன் எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் பின்லாந்து, உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த ராணுவ நடவடிக்கையால் அமெரிக்கா தலைமை தாங்கும் ராணுவ கூட்டமைப்பில் இணைய முன்வந்துள்ளது.