புழுதி பறக்க கபடி ஆடிய சீரியல் நடிகை
விஜய் டிவியில் கிராமத்து கதைக்களத்துடன் ஒளிபரப்பாகும் சீரியல் 'முத்தழகு'. இதில், டிக்டாக் பிரபலமான ஷோபனா தைரியமான கிராமத்து கதாநாயகியாக நடித்து வருகிறார். ஆரம்பத்தில் பல ட்ரோல்களில் சிக்கிய இந்த தொடரானது தற்போது ரசிகர்கள் மத்தியில் ஓரளவு ரீச்சாகியுள்ளது. இந்நிலையில், இந்த தொடரில் ஒரு கபடி போட்டி நடக்கிறது. அதில் ஷோபானா மற்றும் வைஷாலி, தனிகா ஆகியோர் புழுதி பறக்க கிராமத்து மண்ணில் கபடி விளையாடியுள்ளனர். இதன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.