சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏழை, எளிய மாணவிகள் பயன் அடையும் வகையில் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தேமுதிக வரவேற்கிறது. அதேபோன்று, பெண்களுக்கான மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தையும் காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.