இஸ்லாமாபாத்-‘இந்தியா உடனான உறவை மேம்படுத்துவதற்கான பேச்சை நடத்தும் சூழல் தற்போது இல்லை’ என, பாக்., வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் சமீபத்தில் பதவி ஏற்றவுடன், ‘இந்தியாவுடனான நல்லுறவை பாக்., விரும்புகிறது. ஆனால், காஷ்மீர் பிரச்னை தீரும் வரை,நீடித்த அமைதி சாத்தியமில்லை’ என தெரிவித்தார். இதற்கிடையே, டில்லியில் உள்ள பாக்., துாதரகத்தில், இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின், வர்த்தக அதிகாரியை பாக்., அரசு நியமித்துள்ளது.
இதையடுத்து, இந்தியா -பாக்., இடையிலான வர்த்தக உறவு மேம்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.இந்நிலையில், பாக்., வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அசிம் இப்திக்கர் நேற்று கூறுகையில், ”இந்தியாவுடனான பிரச்னைக்கு, சுமுக தீர்வு காண வேண்டும் என்பது எங்களின் விருப்பமாக இருந்தாலும், ஆக்கப்பூர்வமான, பயனுள்ள பேச்சு நடத்தும் சூழல் தற்போது இல்லை,” என்றார்.
இஸ்லாமாபாத்-‘இந்தியா உடனான உறவை மேம்படுத்துவதற்கான பேச்சை நடத்தும் சூழல் தற்போது இல்லை’ என, பாக்., வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.nsimg3029435nsimg பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.