மத்திய அரசு இந்தியைத் திணிக்கவில்லை என்றும், தாய்மொழியில் கல்வி பயிற்றுவிப்பதைப் புதிய கல்விக்கொள்கை ஊக்குவிப்பதாகவும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்த மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி பேசிய அவர் இதனை கூறினார்.
விழாவில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மாணவர்கள் படிக்கும் போதே அனுபவங்களைப் பெறக் கல்வித்துறை, தொழில்துறை, தொழிலாளர் நலத்துறை இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.