திருவொற்றியூர்: எழும்பூரை சேர்ந்தவர் அசோக்குமார்(53), தூய்மை பணியாளர். தினமும் குடித்து விட்டு வேலைக்கு வந்துள்ளார். இதனால் மாதவரம் மண்டல மேலாளர் பாஸ்கரன்(31), மேல் அதிகாரியிடம் புகாரளித்தார். அதன்படி அசோக்குமாரை வேலையை விட்டு நீக்கியதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த அசோக்குமார் நேற்று குடிபோதையில் பாஸ்கரன் மீது பெட்ரோலை ஊற்றி எரிக்க முயன்றார்.புகாரின்படி மாதவரம் போலீசார் அசோக்குமாரை கைது செய்தனர்.