மேற்கு வங்க மாநிலத்தில் டியோச்சா பச்சமி நிலக்கரி சுரங்கம் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, பழங்குடியின மக்களை திரட்டி பாஜகவினர் பேரணி நடத்தினர்.
மேற்கு வங்க மாநிலத்தில் டியோச்சா பச்சமி நிலக்கரி சுரங்கத் திட்டத்துக்காக விதிகளை மீறி நிலம் கையகப்படுத்தப்படுவதாகவும், அதிகாரிகள் தங்களை மிரட்டுவதாகவும் பழங்குடியின மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, இந்த சுரங்க பகுதிகளில் இருந்து தங்களை வெளியேற்றக் கூடாது என்று முறையிட்டும், நிலக்கரி சுரங்கத்திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் அந்த பகுதியில் வாழும் பழங்குடியின மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் பாஜகவைச் சேர்ந்தவருமான சுவெந்து அதிகாரி தலைமையில் நேற்று பிர்பும் நகரில் பேரணி நடந்தது. இதில் பாரம்பரிய வாத்தியங்களை இசைத்துக் கொண்டும், மூலிகைத் தாவரங்களை தலையில் சுமந்து கொண்டும் பழங்குடியின மக்கள் திரளானோர் பங்கேற்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM