காராச்சி,
பாகிஸ்தானில் மே மாதத்தின் மத்தியும் கடுமையான வெப்ப அலை வீசும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பகல் நேர வெப்பநிலை இயல்பை விட 9 டிகிரி செல்சியஸ் அதிகமாக உள்ளது. நாட்டின் பல பகுதிகளிலும் சுட்டெரிக்கும் வெப்பநிலை மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அனைத்து மாகாணங்களுக்கும் வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
சராசரி வெப்பநிலை 6 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக உலக அமைப்புகள் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்து இருந்தன.
பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் முதல் பத்து நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்றாக உள்ளது. அத்துடன் இந்த ஆண்டு 62 சதவீதம் மழைப்பொழிவும் குறைந்துள்ளது. இதனால், அங்குள்ள ஆறுகள் மற்றும் அணைகள் வறண்டு போய் உள்ளது குறிப்பிடத்தக்கது.