டெல்லி: தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே கேரளத்தில் மே 27ல் தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் தென் மேற்கு பருவமழை பெய்யக்கூடும். தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ளதால் அந்தமான் – நிகோபார் தீவு பகுதிகளில் 27 முதல் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.