உக்ரைன் மீது அணு ஆயுதத்தை பயன்படுத்தும் மன நிலையில் ரஷ்யா இருப்பதாக கீவ் நகர மேயர் அச்சம் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான படையெடுப்பு தோல்வியை எதிர்கொண்டுவரும் நிலையில், தலைநகர் கீவ் மீது அணு ஆயுதத்தை பயன்படுத்தும் மோசமான நிலைக்கு புடின் தள்ளப்படலாம் என கீவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ அச்சம் தெரிவித்துள்ளார்.
கீவ் நகரை கைப்பற்றும் நடவடிக்கைகள் உக்ரைன் துருப்புகளால் முறியடிக்கபட, பெரும்பாலான ரஷ்ய வீரர்கள் பின் வாங்க, கீவ் நகரை கைப்பற்றும் முடிவை ரஷ்யா கைவிட்டது.
ஆனால், இன்னொரு முயற்சிக்கு ரஷ்யா தயாராகி வருவதாக நகர மேயர் கிளிட்ச்கோ அச்சம் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் தற்போது போர் முனையில் உள்ளது என குறிப்பிட்டுள்ள கிளிட்ச்கோ, எந்த ஒரு உக்ரைனிய குடிமகனுக்கும் அவரது உயிருக்கு உத்தரவாதமளிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கீவ் நகருக்கு மீண்டும் திரும்பும் மக்களின் முழு பொறுப்பு தங்கள் உயிரை பாதுகாப்பது என்பது எனவும் கிளிட்ச்கோ குறிப்பிட்டுள்ளார்.
விளாடிமிர் புடினின் முதன்மை இலக்கு என்பதே, கீவ் நகரை கைப்பற்றுவதேயாகும், அதனால் அவரது பார்வை கண்டிப்பாக மீண்டும் கீவ் மீது திரும்பும் எனவும் கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.
இரண்டாவது முயற்சியையும் தவிடுபொடியாக்கிய உக்ரைன்: ஆற்றை நீந்தி கடந்து உயிர் தப்பித்த ரஷ்ய வீரர்கள்
விளாடிமிர் புடினுக்கு மிக நெருக்கமான Dmitry Medvedev, மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் அளிப்பதை நிறுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
முன்னாள் ரஷ்ய ஜனாதிபதியான Dmitry Medvedev, நேட்டோ அமைப்பு தொடர்பிலும் தமது வெறுப்பை கொட்டியிருந்தார்.
நேட்டோ நாடுகளால் உக்ரைனில் ஆயுதங்களை குவிப்பது, மேற்கத்திய ஆயுதங்களைப் பயன்படுத்த உக்ரைன் துருப்புக்களை தயார்படுத்துதல்,
கூலிப்படைகளை அனுப்புதல் மற்றும் ரஷ்ய எல்லைகளுக்கு அருகில் அதன் நட்பு நாடுகளின் பயிற்சிகளை நடத்துதல் ஆகியவை நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் நேரடி மற்றும் வெளிப்படையான போரின் சாத்தியத்தை அதிகரிக்கிறது எனவும் Dmitry Medvedev எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதன் காரணமாகவே கீவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ அணு ஆயுத பயன்பாடு தொடர்பில் அச்சம் தெரிவித்துள்ளார்.