ஐதராபாத்: முன்னதாக பிரகாஷ் ராஜ், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவரும், முதல்வருமான சந்திரசேகர் ராவை கடந்த ஓரிரு நாட்களுக்கு முன், அவரது எர்ரவல்லி பண்ணை வீட்டில் சந்தித்துப் பேசினார். அதற்கு முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் பிரகாஷ் ராஜ், சந்திரசேகர ராவை சந்தித்தார். அதனால் பிரகாஷ் ராஜ், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி சார்பில் மனுதாக்கல் செய்யலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. அதேபோல், பாஜ மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமியின் பெயரும் தெலங்கானாவில் அடிபடுகிறது. இவர் பாஜ சார்பில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.