ரிசர்வ் வங்கி-யில் புதிதாக இரு நிர்வாக இயக்குநர்கள்.. யார் இவர்கள்..!

இந்திய ரிசர்வ் வங்கி, வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் சமீபத்தில் நிர்வாகக் குழுவில் சேர்க்கப்பட்ட ராஜீவ் ரஞ்சன் மற்றும் சிதிகாந்த பட்டநாயக் ஆகியோரை நிர்வாக இயக்குநர்களாக நியமித்ததுள்ளது.

இவர்களது நியமனம் , மே 1, 2022 முதல் அமலுக்கு வரும் என்றும் ஆர்பிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

105 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. டாடா ஸ்டீல் பங்குகள் 7% சரிவு..!

இந்திய பொருளாதாரம், வர்த்தகம் ஆகியவை பணவீக்கத்தால் தவித்து வரும் வேளையில் இவ்விருவரின் நியமனம் முக்கியமானதாக விளங்குகிறது.

ராஜீவ் ரஞ்சன், சிதிகாந்த பட்டநாயக்

ராஜீவ் ரஞ்சன், சிதிகாந்த பட்டநாயக்

ஆர்பிஐ நிர்வாக இயக்குநர் ஆகப் பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு, ராஜீவ் ரஞ்சன் பணவியல் கொள்கைத் துறையின் ஆலோசகராகவும், நாணயக் கொள்கைக் குழுவின் செயலாளராகவும் பணியாற்றினார். அதே நேரத்தில் சிதிகாந்த பட்டநாயக் மத்திய வங்கியின் பொருளாதார மற்றும் கொள்கை ஆராய்ச்சித் துறையில் (DEPR) ஆலோசகராக இருந்தார்.

ராஜீவ் ரஞ்சன் அனுபவம்

ராஜீவ் ரஞ்சன் அனுபவம்

ராஜீவ் ரஞ்சன் நிதிக் கொள்கை, ரியல் எஸ்டேட் துறை, வெளித் துறை மற்றும் சர்வதேச உறவுகள் உள்ளிட்ட மேக்ரோ பொருளாதாரக் கொள்கை மற்றும் ஆராய்ச்சியில் நிபுணத்துவம் பெற்றவர்.

மேலும் ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைத் துறை, பொருளாதாரக் கொள்கை மற்றும் ஆராய்ச்சித் துறை, வெளி முதலீட்டுத் துறை மற்றும் செயல்பாடுகள் மற்றும் சர்வதேச துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார்.

சிதிகாந்த பட்டநாயக் அனுபவம்
 

சிதிகாந்த பட்டநாயக் அனுபவம்

சிதிகாந்த பட்டநாயக் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைத் துறை மற்றும் பொருளாதாரக் கொள்கை மற்றும் ஆராய்ச்சித் துறையில் பொருளாதார ஆராய்ச்சியில் பணியாற்றியுள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாக இயக்குநர்கள் இருவரும், 30 ஆண்களுக்கு மேலான அனுபவத்துடன் இருக்கும் முக்கிய அதிகாரிகளாகும். ரிசர்வ் வங்கியின் பிரதிநிதியாக ஓமன் சென்ட்ரல் வங்கியில் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பணி பொறுப்புகள்

பணி பொறுப்புகள்

ராஜீவ் ரஞ்சன் நிர்வாக இயக்குநராக, இனி பணவியல் கொள்கைத் துறையை (MPD) கவனிப்பார். நிர்வாக இயக்குனராகச் சிதிகாந்த பட்டநாயக் பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆராய்ச்சி துறையை (DEPR) வழிநடத்துவார்.

சிதிகாந்த பட்டநாயக் கல்வி

சிதிகாந்த பட்டநாயக் கல்வி

சிதிகாந்த பட்டநாயக் மும்பை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் M. Phil; ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தில் சர்வதேச நிதியில் முதுகலைப் பட்டம்; உத்கல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் எம்.ஏ, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃ பேங்கிங் அண்ட் ஃபைனான்ஸ் (சிஏஐஐபி) சான்றளிக்கப்பட்ட அசோசியேட் பல தகுதிகளைப் பெற்றுள்ளார்.

ராஜீவ் ரஞ்சன் கல்வி

ராஜீவ் ரஞ்சன் கல்வி

மும்பை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற ராஜீவ் ரஞ்சன், டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். அவர் பணவியல் கொள்கைக் குழுவின் பதவிக்கால உறுப்பினராகவும் பணியாற்றுவார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

RBI appoints Rajiv Ranjan, Sitikantha Pattanaik as new Executive Directors

RBI appoints Rajiv Ranjan, Sitikantha Pattanaik as new Executive Directors ரிசர்வ் வங்கி-யில் புதிதாக இரு நிர்வாக இயக்குநர்கள்.. யார் இவர்கள்..!

Story first published: Friday, May 13, 2022, 22:14 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.