சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை, பார்க்கிங் வசதிகளுடன் உலகத்தரத்திற்கு மேம்படுத்துவதற்காக ரூ. 500 கோடி ஒதுக்கப்பட்டு பணிகளுக்கு ஒப்பந்ததாரர் நியமனம் வேகமாக நடந்து வருகிறது.
சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அடுத்து முக்கிய ரயில் நிலையம் என்றால் அது சென்னை எழும்பூர் ரயில் நிலையம் என்று கூறலாம். எழும்பூர் ரயில் நிலையத்தின் இந்தோ – சார்சானிக் பாணியில், கட்டப்பட்டது. சென்னை எழும்பூர் ரயில் நிலையம், 1908ம் ஆண்டு, ஜூன், 11ம் தேதி திறக்கப்பட்டது. எழும்பூர் ரயில் நிலையம் பல்வேறு காலகட்டங்களில் பல வசதிகளை ஏற்படுத்த விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வந்துள்ளது. எழும்பூர் ரயில் நிலையம், தற்போது, 11 நடைமேடைகளுடன் இயங்கி வருகிறது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தற்போது, 28 ரயில்களும், எழும்பூர் ரயில் நிலையம் வழியாக, 23 ரயில்களும் இயக்கப்படுகின்றன. எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள புறநகர் மின்சார ரயில் நிலையம், மற்றும் எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையம் வழியாகவும் தினமும் 4.5 லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர்.
இருப்பினும் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இன்னும் வாகன பார்க்கிங் உள்ளிட்ட பல வசதிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நூற்றாண்டு கடந்த சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு புதுப்பொலிவு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த நிலையில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை, பார்க்கிங் வசதிகளுடன் உலகத்தரத்திற்கு மேம்படுத்துவதற்காக ரூ. 500 கோடி ஒதுக்கப்பட்டு பணிகளுக்கு ஒப்பந்ததாரர் நியமனம் வேகமாக நடந்து வருகிறது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் ரூ. 500 கோடி செலவில் உலகத்தரத்தில் மேம்படுத்தப்பட உள்ளது என்றும் பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட உள்ளது.
எழும்பூரில் உள்ள காந்தி இர்வின் சாலையில் உள்ள சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் முகப்பு, பிரபல கட்டடக்கலை தொழில் நுட்ப வல்லுனர்களால் தற்போது இருக்கும் அதே வடிவில் பிரமாண்ட கட்டடமாக கட்டப்பட உள்ளது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
அதுமட்டுமில்லாமல், எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான தங்கும் இடவசதிகள் அதிகரிக்கப்பட உள்ளன. நடை மேடைகள், நடை மேம்பாலங்கள் தரம் உயர்த்தப்பட உள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில், மின் துாக்கி, நகரும் படிக்கட்டு வசதிகள் அமைக்கப்பட உள்ளன.
லட்சக் கணக்கான ரயில் பயணிகள் எழும்பூர் ரயில் நிலையத்தைப் பயன்படுத்துவதால், இரு சக்கர, நான்கு சக்கரங்களுக்கு அடுக்குமாடி வாகன நிறுத்தம் கட்டப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றன.
மொத்தத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த சென்னை எழும்பூர் ரயில் நிலையம், பழமை மாறாமல், உலகத் தரத்தில் நவீனமாக மாற உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“