இஸ்லாமாபாத்:பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷரீப், லண்டன் சென்று தன் சகோதரரும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப்பை சந்தித்துப் பேசினார். நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. விலைவாசி உயர்வு, நிர்வாக சிக்கல்களை குறிப்பிட்டு, ‘பாக்.,கில் உடனடியாக பொதுத் தேர்தல் நடத்த வேண்டும்’ என, முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
இந்நிலையில் கடந்த மாதம் பாக்., பிரதமராக பொறுப்பேற்ற ஷெபாஸ் ஷரீப், தன் அமைச்சரவை குழுவுடன் தனி விமானத்தில் பிரிட்டன் தலைநகர் லண்டன் சென்றார். அங்கு, தன் சகோதரர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்து பேசினார். இந்தப் பேச்சில், பாக்., நெருக்கடிக்கு தீர்வு காணும் திட்டங்கள் குறித்து, நவாஸ் ஷெரீப் பல்வேறு யோசனைகளை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ‘பாக்., பிரதமர் மூன்று நாட்கள் லண்டனில் தங்கி, மீண்டும் நவாஸ் ஷெரீப்பை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்’ என, பாக்., தகவல் துறை அமைச்சர் மரியம் அவுரங்கசீப் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்:பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷரீப், லண்டன் சென்று தன் சகோதரரும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப்பை சந்தித்துப் பேசினார்.நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.