வட கொரியாவில் கொரோனா பெருந்தொற்றால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
வட கொரியாவில் நேற்று முதல் முறையாக ஒருவருக்கு ஒமைக்ரான் வகை தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அதிபர் கிம் ஜாங் வுன் அங்கு ஊரடங்கை பிரகடனப்படுத்தி உள்ளார். நேற்று 18,000 பேருக்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்ட நிலையில் இன்று 3 லட்சத்து 50,000 பேர் காய்ச்சலுக்காக தனிமை படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி வழங்க முன்வந்த போது வட கொரியா அதனை நிராகரித்து விட்டது. இதனால் அங்கு வசிக்கும் இரண்டரை கோடி பேரும் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். தற்போது முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கொரோனா பரவலை அந்நாட்டு அரசு எப்படி கட்டுப்படுத்த போகிறது என கேள்வி எழுந்துள்ளது.