எனக்கு கோடிக்கணக்கான தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் ஆசீர்வாதம் உள்ளது, இந்த கவசம் என்னிடம் இருக்கும் வரை, என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்று பிரதமர் மோடி கூறினார்.
குஜராத் மாநிலம் பருச்’ உத்கர்ஷ் சமரோவில், மத்திய அரசின் நான்கு திட்டங்களின் பயனாளிகள் கூடியிருந்த மாநாட்டில் காணொலி வாயிலாக பேசிய மோடி, “ஒருமுறை நான் ஒரு தலைவரைச் சந்தித்தேன்…அவர் மிகவும் மூத்த தலைவர்…அவர் ஒரு அரசியல் எதிரி, ஆனால் நான் அவரை மதிக்கிறேன். ஒரு நாள், சில பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள அவர் என்னை சந்திக்க வந்தார். அவர், என்னிடம் ‘மோடிஜி, இப்போது நீங்கள் வேறு என்ன செய்ய விரும்புகிறீர்கள்? நாடு உங்களை இரண்டு முறை பிரதமராக்கியுள்ளது என்றார்.
“இரண்டு முறை பிரதமரானது மிகப்பெரிய சாதனை என்று அவர் நினைத்தார். இந்த மோடி வேறு ஏதோவொன்றால் உருவாக்கப்பட்டவர் என்பது அவருக்குத் தெரியாது… குஜராத் மண் தான் அவரை வடிவமைத்துள்ளது.
நடந்ததெல்லாம் நல்லதே என்று நினைத்து, நான் இப்போது ஓய்வெடுத்தால் மட்டும் போதாது…எனது கனவு அனைத்திலும் முழுமையடைவது… இலக்கை 100 சதவீதம் அடைவது. அரசு இயந்திரத்தை பழக்கப்படுத்துவது, குடிமக்கள் மீது நம்பிக்கையை உருவாக்குவது.
2014 ஆம் ஆண்டு நான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, “கிட்டத்தட்ட பாதி நாட்டில் கழிப்பறைகள், தடுப்பூசிகள், மின்சாரம், வங்கிக் கணக்குகள் ஆகியவற்றிலிருந்து 100 மைல்கள் தொலைவில் இருந்தது, ஒரு விதத்தில் அவை மறுக்கப்பட்டன. இத்தனை ஆண்டுகளில் எங்களின் அனைத்து முயற்சிகளாலும் பல திட்டங்கள் 100 சதவீத நிலையை எட்டியுள்ளன.
இவை “கடினமான பணிகள் மற்றும் அரசியல்வாதிகள் அவற்றைத் தொட பயப்படுகிறார்கள்” ஆனால் நான் இங்கு “அரசியல் செய்யவில்லை, நாட்டின் குடிமக்களுக்கு சேவை செய்ய” வந்தேன்.
100 சதவீத இலக்கை எட்டுவோம் என்று நாடு உறுதியளித்துள்ளது. இது நிகழும்போது, இந்தப் பணத்தில் எனக்கு உரிமை உண்டு என்று குடிமகன் நம்பத் தொடங்குகிறார், இது கடமையின் விதையை விதைக்கிறது. இது நிறைவேறும் போது, பாகுபாடு ஏற்பட வாய்ப்பில்லை, பரிந்துரை தேவையில்லை. இது நிகழும்போது, திருப்திப்படுத்தும் அரசியல் முடிவுக்கு வரும்” என்று மோடி கூறினார்.
“ஒருமுறை எனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் பற்றிய செய்தி வந்தது, ஒருமுறை எனது நோய் பற்றிய செய்தி வந்தது … அப்போது நான் சொன்னேன், ‘அண்ணா, எனக்கு கோடிக்கணக்கான தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் ஆசீர்வாதம் உள்ளது, இந்த கவசம் என்னிடம் இருக்கும் வரை, என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது’ நான் ஒரு “குடும்ப உறுப்பினராக” பணிபுரிகிறேன், எனது அரசாங்கம், எட்டு ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்து, “புதிய வாக்குறுதி மற்றும் புதிய ஆற்றலுடன்” முன்னேறி வருகிறது.
எனது அரசு 50 கோடி பேருக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தலா ரூ. ஐந்து லட்சமும், விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கானோர் காப்பீடு செய்யப்பட்டும், மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதியத் திட்டமும் வழங்கியது.
மக்கள் தங்கள் சொந்த வீடுகள், எரிவாயு இணைப்புகள், மின் இணைப்புகள், தண்ணீர் இணைப்புகள் மற்றும் வங்கிக் கணக்குகளைப் பெற்றுள்ளனர். “ஏழைகள் தங்கள் வாழ்நாளில் பாதியை அரசு அலுவலகங்களைச் சுற்றி ஓடுவார்கள், எங்கள் அரசாங்கம் அதையெல்லாம் மாற்றியது என்று மோடி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“