வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாட்னா: பீஹாரில் 2000 முதலீட்டாளர்களின் பணத்தை ஒப்படைக்க கோரிய வழக்கில் சகாரா குழுமத்தின் சுப்ரதா ராய் வரும்16-ம் தேதி நேரில் ஆஜாராக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சுப்ரதா ராயின் ‘சஹாரா குழுமம், ‘செபி’ யின் அனுமதியின்றி 2010ல் கடன் பத்திரங்களை வெளியிட்டு பல ஆயிரம் கோடி ரூபாய் திரட்டின. இதையடுத்து செபி தொடர்ந்த வழக்கில் ‘சுப்ரதா ராய் செபிக்கு 25 ஆயிரத்து 700 கோடி ரூபாய் செலுத்த செலுத்த தவறியதால் கைது செய்யப்பட்டு 2014ல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் பீஹாரில் சகாரா குழுமத்தில் 2000 முதலீட்டாளர்களின் பணத்தை திருப்பி தராததால், சுப்ரதா ராய் மீது பாட்னா ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், பலமுறை நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. சுப்ரதா ராய் தாக்கல் செய்திருந்த முன் ஜாமின் மனுக்களும் இன்று விசாரணைக்கு வந்தன.
திபதி சந்தீப்குமார் கூறியது, இவ்வளவு பெரிய தொகையை சுப்ரதா ராயிடமிருந்து எப்படி வசூலிப்பீர்கள், சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகமால் சுப்ரதா ராய் கோர்ட்டை அவமதித்துள்ளார். அவரை வரும் 16-ம் தேதி காலை 10.30 மணிக்குள் நேரில் ஆஜர்படுத்த வேண்டும். இதற்கு பீஹார் காவல்துறை டி.ஜி.,பிக்கு, டில்லி, உபி. போலீஸ் கமிஷனர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
Advertisement