நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
கடந்த 9ஆம் தேதி திருமலைபட்டி கூட் ரோடு சந்திப்பில் சென்றுக்கொண்டிருந்த இருசக்கர வாகனம் சாலையின் சென்டர் லேனை கடந்து வலதுபுறம் ஏறி வந்து திரும்ப முயன்ற போது, எதிர்திசையில் அதிவேகமாக வந்த ஒரு இருசக்கர வாகனம், இந்த வாகனம் மீது மோதியது.
நேருக்கு நேர் மோதிய வேகத்தில் இரு வாகனங்களில் இருந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த மூவரையும் மீட்ட பொதுமக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.