மதுரையில் 2 தலைமுறையாக அரசு நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்தவரின் நிலத்தை அதிகாரிகள் மீட்க சென்றபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயி ஒருவர் தீக்குளிக்க முயன்றார்.
விக்கிரமங்கலம் அருகே வையத்தான் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 4 ஏக்கர் 55 செண்ட் புறம்போக்கு நிலம் சுமார் 40 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் புகாரின் அடிப்படையில் பொக்லைன் இயந்திரம் மற்றும் காவல்துறையினருடன் வந்த வருவாய் துறை அதிகாரிகள்,நிலத்தில் இருந்த தென்னை மரங்கள் உள்ளிட்டவற்றை அகற்றினர்.
இதனையடுத்து தீக்குளிக்க முற்பட்ட அர்ஜுணன் என்ற நபரை காவலர்கள் தடுத்து நிறுத்தி ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர்.