வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டில்லி: கடந்த 2012ம் ஆண்டுக்குப் பின்னர் கொரோனா தாக்கம், எரிபொருள் விலை உயர்வு, அத்தியாவசிய பொருள் தட்டுப்பாடு காரணமாக இந்திய ஆட்டோமொபைல் தொழில் சரிவடைந்துள்ளது.
சிறிய ரக கார்களின் விற்பனை இந்த ஆண்டு 3.8 சதவீதம் சரிந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கம் காரணமாக கார் தயாரிப்புக்குத் தேவையான மின்னணு உதிரி பாகமான செமிகண்டக்டர்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வெகுவாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக நான்கு பேர் அமர்ந்து செல்லக்கூடிய சிறிய ரக கார்களின் தயாரிப்பு குறைந்தது.
கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் 2 லட்சத்து 60 ஆயிரத்து 233 சிறிய ரக கார்கள் விற்பனையான நிலையில் இந்த ஆண்டு 2 லட்சத்து 51 ஆயிரத்து 581 கார்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன. வரலாறு காணாத வகையில் இருசக்கர வாகனங்களின் விலை இந்த ஆண்டு சரிந்து உள்ளதாக எஸ்ஐஏஎம் இயக்குனர் ஜெனரல் ராஜேஷ் மேனன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருசக்கர வாகன விற்பனை இந்தியாவில் கணிசமாக குறைந்தது. இதனை அடுத்து இந்த ஆண்டு இதே நிலை நீடிக்கிறது. வாகன உற்பத்தியாளர்கள் மூலப் பொருட்கள் இல்லாமல் வாகன உற்பத்தி இலக்கை எட்ட முடியாமல் தவிக்கும் நிலையில் வாகனங்களை நாடு முழுதும் பல்வேறு அங்காடிகளுக்கு உரிய நேரத்தில் கொண்டு சேர்க்கும் பணியும் மந்தம் ஆகியுள்ளது.
தற்போது பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை அதிகரித்ததன் காரணமாகவும் கொரோனா தாக்கம் காரணமாகவும் கடந்த 2 ஆண்டுகளாக ஏற்பட்ட வேலையின்மை மற்றும் தொழில் மந்தம் காரணமாகவும் இந்திய ஆட்டோமொபைல் துறை சரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தியை விற்பனை அளவை பொறுத்து குறைத்துக் கொண்டுள்ளனர்.
Advertisement