ஃபோர்ப்ஸ் நிறுவனம் உலகின் டாப் 2000 நிறுவனங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த 12 மாதங்களாக இந்த நிறுவனங்கள் வெளியிட்ட நிதி அறிக்கைகளை வைத்து இந்த பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் தயரித்துள்ளது..
எனவே அதில் உள்ள டாப் 10 நிறுவனங்கள் பட்டியலை இங்கு பார்க்கலாம்.
சோமாட்டோவுக்கு போட்டியாக டைன்-அவுட் நிறுவனத்தை வாங்கிய ஸ்விகி..!!
10வது இடம்
டொயோட்டா மோட்டார்ஸ்
சந்தை மதிப்பு: 237.73 பில்லியன் டாலர்
சொத்து மதிப்பு 552.46 பில்லியன் டாலர்
லாபம்: 28.15 பில்லியன் டாலர்
விற்பனை: 281.75 பில்லியன் டாலர்
9வது இடம்
பாங்க் ஆப் அமெரிக்கா
சந்தை மதிப்பு: 303.1 பில்லியன் டாலர்
சொத்து மதிப்பு: 3,232.22 பில்லியன் டாலர்
லாபம்: 31 பில்லியன் டாலர்
விற்பனை: 96.83 பில்லியன் டாலர்.
8வது இடம்
அக்ரிகல்ச்சுரல் பாங்க் ஆப் இந்தியா
சந்தை மதிப்பு: 133.38 பில்லியன் டாலர்
சொத்து மதிப்பு: 4,561.05 பில்லியன் டாலர்
விற்பனை: 181.42 பில்லியன் டாலர்
லாபம்: 37.38 பில்லியன் டாலர்
7வது இடம்
ஆப்பிள்
சந்தை மதிப்பு: 2,6040 பில்லியன் டாலர்
சொத்து மதிப்பு: 381.19 பில்லியன் டாலர்
லாபம்: 100.56 பில்லியன் டாலர்
விற்பனை: 378.7 பில்லியன் டாலர்.
6வது இடம்
அமெசான்
சந்தை மதிப்பு: 1,468.4 பில்லியன் டாலர்
சொத்து மதிப்பு: 420.55 பில்லியன் டாலர்
லாபம்: 33.36 பில்லியன் டாலர்
விற்பனை: 469.82 பில்லியன் டாலர்.
5வது இடம்
சீனா கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம்
சந்தை மதிப்பு: 181.32 பில்லியன் டாலர்
சொத்து மதிப்பு: 4,746.95 பில்லியன் டாலர்
லாபம்: 46.89 பில்லியன் டாலர்
விற்பனை: 202.07 பில்லியன் டாலர்
4வது இடம்
ஜேபி மார்கன் சேஸ்
சந்தை மதிப்பு: 374.45 பில்லியன் டாலர்
சொத்து மதிப்பு: 3,954.69 பில்லியன் டாலர்
லாபம்: 42.12 பில்லியன் டாலர்
விற்பனை: 121.54 பில்லியன் டாலர்
3வது இடம்
சவுதி ஆரம்கோ
சந்தை மதிப்பு: 2,292.08 பில்லியன் டாலர்
சொத்து மதிப்பு: 576.04 பில்லியன் டாலர்
லாபம்: 105.36 பில்லியன் டாலர்
விற்பனை: 400.38 பில்லியன் டாலர்.
2வது இடம்
சந்தை மதிப்பு: 214.43 பில்லியன் டாலர்
சொத்து: 5,518.51 பில்லியன் டாலர்
விற்பனை: 208.13 பில்லியன் டாலர்
1வது இடம்
பெர்க்ஷயர் ஹாத்வே
சந்தை மதிப்பு: 741.48 பில்லியன் டாலர்
சொத்து: 958.78 பில்லியன் டாலர்
விற்பனை: 276.09 பில்லியன் டாலர்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ஃபோர்ப்ஸின் உலக டாப் 2000 நிறுவனங்கள் பட்டியலில், டாப் 100 நிறுவனங்களில் இடம்பெற்ற ஒரே இந்திய நிறுவனமான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 53வது இடத்தில் உள்ளது.
இந்திய வங்கிகள்
எஸ்பிஐ(105), எச்.டி.எப்.சி வங்கி (153), ஐசிஐசிஐ வங்கி (204), ஆக்சிஸ் வங்கி (431) நிறுவனங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. வங்கி அல்லத நிதி நிறுவனங்களில் எச்.டி.எப்.சி லிமிட்டட் (268) நிறுவனம் இடம்பெற்றுள்ளது.
டாடா குழுமம்
டாடா குழுமத்தில் இருந்து டிசிஎஸ் (384) மற்றும் டாடா ஸ்டீல்(431) நிறுவனங்கள் ஃபோர்ப்ஸ் 2000 நிறுவனங்கள் பட்டியலில் உள்ளன.
வேதாந்தா நிறுவனம்
வேதாந்தா நிறுவனம் சென்ற ஆண்டு இந்த பட்டியலில் 703வது இடத்தில் இருந்தது. அதுவே 2022-ம் ஆண்டு 593வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
Top 10 Companies Of The World In 2022 From Forbes Global 2000
Top 10 Companies Of The World In 2022 From Forbes Global 2000 | 2022-ம் ஆண்டு உலகின் டாப் 10 நிறுவனங்கள் இவைதான்!