இந்தியாவின் மிகவும் பிரசித்தி மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவி விற்பனைக்கு வெளியாக உள்ளது. வரவிருக்கும் 2023 ஸ்கார்பியோ வெளிப்புற விவரங்களை டீசர் மூலமாக வெளிப்படுத்தியுள்ளது. மிக நீண்டகாலமாக சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது.
“Big Daddy of SUVs” என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள டீசரில் ஸ்கார்பியோவின் தோற்ற அமைப்பில் பல்வேறு மாற்றங்களை கொண்டுள்ளது. Z101 என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்ட புதிய ஸ்கார்பியோ எஸ்யூவி தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், பளபளப்பான பிரவுன் மற்றும் அடர் பச்சை நிற பெயிண்ட் பெற்றுள்ளது. முன்புறத்தில், மஹிந்திராவின் புதிய லோகோவை கொண்டுள்ளது.
வழக்கமான மஹிந்திராவின் சிக்னேச்சர் செங்குத்து ஸ்லேட்டுகளை குரோமில் கொடுக்கப்பட்டு கீழே, நம்பர் பிளேட்டைக் கொண்ட பம்பரில் தேன்கூடு கிரில் உள்ளது. எல்இடி டிஆர்எல் சூழ்ந்துள்ள எல்இடி மூடுபனி விளக்குகள் என முன்புறத்தில் முரட்டுத்தனமான தோற்றத்தை அளிக்கின்றன.
எஸ்யூவி காரின் கூரையில் உள்ள தண்டவாளங்கள் வெள்ளை நிறத்திலும் பக்கவாட்டு ஜன்னல் வரிசையில் குரோம் செருகல்களைப் பெறுகிறது. கீழே உள்ள ஸ்கிட் பிளேட்டுகள் சில்வர் நிறத்திலும் வந்துள்ளது.
புதிய ஸ்கார்பியோ, மஹிந்திரா XUV700 காரை போன்றே, லெவல் 2 ADAS அம்சத்துடன் வரலாம், இது செக்மென்ட்டில் முதல் முறையாகும். புதிய மஹிந்திரா ஸ்கார்பியோவின் உட்புறம் கேபினின் மையத்தில் தொடுதிரையுடன் எஸ்யூவி வரவுள்ளது.
புதிய ஸ்கார்பியோ இரட்டை மண்டல காலநிலை கட்டுப்பாடு, டிரைவ் மோட், ESC மற்றும் பலவற்றையும் பெறும்.
பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் விருப்பங்களை XUV700 மாடலில் இருந்து பகிரப்படும் போது, அவற்றின் பவர் சற்று குறைவாக இருக்கும்.
கியர்பாக்ஸ் தேர்வுகள் ஆறு-வேக மேனுவல் மற்றும் அனைத்து வகைகளுக்கும் ஆறு-வேக முறுக்கு மாற்றி ஆட்டோமேட்டிக் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்கார்பியோ எஸ்யூவியில் 2WD & 4WD விருப்பத்தை மஹிந்திரா வழங்கும்.
மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவி விரைவில் விற்பனைக்கு வருகின்ற தேதி வெளியிடப்படலாம்.