21 வயதான கேரள நடிகை பிறந்த நாள் அன்று உயிரிழப்பு

கோழிக்கோடு

னது பிறந்த நாள் அன்று 21 வயதாகும் கேரள நடிகை சகானா உயிர் இழந்துள்ளார்.

கேரளாவில் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள செருவாத்தூர் பகுதியை சேர்ந்த சகானா என்பவர் மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டவர் ஆவார்.  சகானா நிறைய நகைக்கடை விளம்பரங்களில் நடித்துள்ளார். சகானா சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் சஜ்ஜத் என்பவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.  சஜ்ஜத் திருமணத்திற்கு முன்னர் அவரது கணவர் கத்தாரில் பணிபுரிந்து வந்துள்ளார்.

முதலில்  கோழிக்கோடு பகுதியில் உள்ள சஜ்ஜத் வீட்டில் இருவரும் வசித்து வந்து பின்னர் வாடகை வீட்டிற்குக் குடி பெயர்ந்துள்ளனர்.  சகானா நேற்று (மே 12) தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார் இந்நிலையில் இரவு 1 மணியளவில் அவர் மூச்சு பேச்சின்றி இருப்பதாக சஹானாவின் குடும்பத்தாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

சகானா குளியலறையில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். பின்னர் அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.  சகானாவின் மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக சகானாவின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். தங்கள் மகளைப் புகுந்த வீட்டினரும், கணவரும் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சகானாவுக்கு திருமணத்திற்காக கொடுத்த நகைகளையும் சஜ்ஜாத் விற்று விட்டதாக சொல்லப்படுகிறது.  மேலும் அண்மையில் தமிழ் விளம்பரம் ஒன்றில் சஹானா நடித்துள்ளார். அதில் கிடைத்த தொகை தொடர்பாகத் தம்பதிகளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது..  இது தொடர்பாக அவரது கணவரை காவல்துறை விசாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.