3 மாதத்தில் ரூ.1506 கோடி லாபம் பார்த்த டெக் மகேந்திரா.. முதலீட்டாளர்களுக்கும் சர்பிரைஸ் உண்டு?

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டெக் மகேந்திரா, அதன் மார்ச் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. இதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 39 சதவீதம அதிகரித்து, 1506 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே கடந்த காலாண்டினை காட்டிலும் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது கடந்த ஆண்டில் 1081 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் அதல பாதாளம் நோக்கி செல்லும் ரூபாய்..ஏன்.. 3 முக்கிய காரணங்கள் இதோ!

இதே வருவாய் விகிதம் கடந்த ஆண்டினை காட்டிலும் 24.5 சதவீதம் அதிகரித்து, 12,116 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 9730 கோடி ரூபாயாக் இருந்தது குறிப்பிடத்தக்கது.

வருவாய் விகிதம்

வருவாய் விகிதம்

இது கடந்த 2021 – 22ம் நிதியாண்டில் நிகர லாபம் 25.7 சதவீதம் அதிகரித்து, 5566 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் வருவாய் விகிதமானது கடந்த 2022ம் நிதியாண்டில் 17 சதவீதம் அதிகரித்து, 44,646 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

டிவிடெண்ட்

டிவிடெண்ட்

இந்த நிறுவனத்தின் இபிஎஸ் விகிதம் 2022ம் நிதியாண்டில் 62.8 ஆக அதிகரித்துள்ளது. இதே ஒரு பங்குக்கு ஸ்பெஷல் டிவிடெண்டாக 15 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிவிடெண்ட் விகிதத்தினை ஆகஸ்ட் 9, 2022 அன்று வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிகப்பெரியளவில் ஒப்பந்தம்
 

மிகப்பெரியளவில் ஒப்பந்தம்

டெக் மகேந்திரா நிறுவனத்தின் டிஜிட்டல் பரிமாற்ற வாணிகம், புதிய டெக்னால்ஜிகள், உள்ளிட்ட பலவும் நல்ல வாளர்ச்சியினை கண்டுள்ளன. இதற்கிடையில் பல மிகப்பெரிய ஒப்பந்தங்களையும் டெக் மகேந்திரா வென்றுள்ளது. இது கடந்த 7 அஆண்டுகளில் மிகப்பெரிய அளவாகும்.

 டாலரில் என்ன நிலவரம்?

டாலரில் என்ன நிலவரம்?

டாலரின் இதன் வருவாய் விகிதமானது கடந்த ஆண்டினை காட்டிலும் 21 சதவீதம் அதிகரித்து, 1.61 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இதே பவரிக்கு பிந்தைய லாபம் கடந்த ஆண்டினை காட்டிலும் 24.9 சதவீதம் அதிகரித்து, 198.5 மில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.

அட்ரிஷன் விகிதம்

அட்ரிஷன் விகிதம்

இந்த நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் 24 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 13 சதவீதமாக இருந்தது. எனினும் இந்த நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையானது, கடந்த காலாண்டினை காட்டிலும் 4.2 சதவீதம் அதிகரித்து, 1,51,173 ஆக அதிகரித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Tech mahindra announced net profit surges 39% to Rs.1506 crore in q4,2022

Tech Mahindra, India’s leading IT company, reported a 39% increase in consolidated net profit for the March quarter to Rs 1,506 crore.

Story first published: Friday, May 13, 2022, 22:25 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.