Epfo news in tamil: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) உள்ள சந்தாதாரர்களுக்கு முக்கியமான செய்தி ஒன்று வந்துள்ளது. அது என்னவென்றால், கடந்த நிதியாண்டில் பெறப்பட்ட வட்டிப் பணம் அடுத்த மாதத்திற்குள் கிடைத்து விடுமாம். இபிஎஃப்ஓ உடன் தொடர்புடைய ஆதாரங்களின்படி, வட்டிப் பணத்தை ஜூன் 30ம் தேதிக்குள் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தற்போதுவரை ஊழியர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து ஊழியர்கள் பலர் சரியாக கண்காணிக்கப்பதில்லை. மேலும், இதுவரை டெபாசிட் செய்யப்பட்ட நிதிக்கு எவ்வளவு வட்டி வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் அவர்கள் தெரிந்து கொள்வதில்லை. நீங்களும் உங்கள் இபிஎஃப் கணக்கை முறையாக கண்காணிக்காதவராக இருந்தால், இந்த சிறப்பு செய்தி உங்களுக்கு தான்.
இபிஎஃப் இ-ஸ்டேட்மெண்ட்:
இபிஎஃப் இ-ஸ்டேட்மெண்ட் ஊழியர்களுக்கு பல வழிகளில் உதவுகிறது. இபிஎஃப் பாஸ்புக் மூலம், பிரிவு 80C இன் கீழ் மொத்த வருமானத்தில் இருந்து எவ்வளவு விலக்கு பெறலாம் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். இந்த இபிஎஃப் பாஸ்புக், நீங்களும் உங்கள் நிறுவனமும் செய்த பங்களிப்பின் மூலம், எவ்வளவு தொகை மொத்தமாக கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.
இவை தவிர, இபிஎஃப் கணக்கை முந்தைய நிறுவனத்தில் இருந்து புதிய நிறுவனத்திற்கு மாற்றவும் இபிஎஃப் பாஸ்புக் ஊழியர்களுக்கு உதவுகிறது. இபிஎஃப் பாஸ்புக்கில், பிஎஃப் கணக்கு எண், வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்), ஓய்வூதிய திட்ட விவரங்கள், நிறுவனத்தின் பெயர் மற்றும் ஐடி, இபிஎஃப்ஓ அலுவலக விவரங்கள் உள்ளிட்டவை இடம்பெறுகின்றன.
இப்படி பல வழிகளில் ஊழியர்களுக்கு உதவும் இபிஎஃப் பாஸ்புக்கை பெற இபிஎஃப்ஓ இணையதளத்தில் பதிவு செய்வது அவசியமான ஒன்றாகும். அந்தவகையில் இபிஎஃப்ஓ இணையதளத்தில் இபிஎஃப் பாஸ்புக் பெற எப்படி பதிவு செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
பின்வரும் படிகளை கொண்டு இபிஎஃப்ஓ இணையதளத்தில் இபிஎஃப் பாஸ்புக் பெற பதிவு செய்யலாம்:
- https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ க்குச் செல்லவும்.
- ‘ஆக்டிவேட் யுஏஎன்’ (யுனிவர்சல் அகவுண்ட் நம்பர்) என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் திரையில் ஒரு புதிய பக்கம் தோன்றும். யுஏஎன், ஆதார், பான் மற்றும் பிற விவரங்களை உள்ளிடவும். சில தகவல்களை உள்ளிட வேண்டியது அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவை சிவப்பு நிற நட்சத்திரத்துடன் குறிக்கப்பட்டிருக்கும்.
- ‘கெட் ஆதரைசேஷன் பின்’ என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் திரையில் ஒரு புதிய பக்கம் தோன்றும். இதில், நீங்கள் உள்ளிட்ட விவரங்களைச் சரிபார்க்கும்படி கேட்கப்படுவீர்கள். உங்கள் மொபைலுக்கு எஸ்எம்எஸ் மூலம் ஓடிபி அனுப்பப்படும்.
- ஓடிபியை உள்ளிட்டு, ‘ஓடிபியைச் சரிபார்த்து யுஏஎன் ஆக்டிவேட் செய்’ என்பதைக் கிளிக் செய்யவும். யுஏஎன் ஆக்டிவேட் ஆனவுடன் கடவுச்சொல்லுடன் எஸ்எம்எஸ்-ஐ பெறுவீர்கள். உங்கள் கணக்கில் உள்நுழைய இந்தக் கடவுச்சொல்லைப் பயன்படுத்தவும். உள்நுழைந்த பிறகு உங்கள் கடவுச்சொல்லை மாற்றிக்கொள்ளலாம்.
இபிஎஃப் பாஸ்புக் பெற இபிஎஃப்ஓ இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்த 6 மணிநேரத்திற்குப் பிறகுதான் பாஸ்புக்கை காண முடியும்.
இபிஎஃப் பாஸ்புக்கை பதிவிறக்கம் செய்யும் எளிய வழிமுறை இங்கே:
1: https://passbook.epfindia.gov.in/MemberPassBook/Login.jsp என்ற இணையதள பக்கத்திற்குச் செல்லவும்.
2: யுஏஎன், கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும். ‘லாக்-இன்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
3: லாக் இன் செய்த பிறகு, உங்கள் பாஸ்புக்கைப் பார்க்க உறுப்பினர் ஐடியைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 4: பாஸ்புக் பிடிஎஃப் வடிவத்தில் இருக்கும். அதை எளிதாக பதிவிறக்கம் செய்யலாம்.
விலக்கு அளிக்கப்பட்ட பிஎஃப் அறக்கட்டளைகளின் (எக்ஸெம்ப்டட் பிஎஃப் டிரஸ்ட்) பாஸ்புக்கைப் பார்க்க முடியாது என்பதை நினைவில் கொள்ளவும். அத்தகைய நிறுவனங்கள், பிஎஃப் டிரஸ்டை தாங்களே நிர்வகிக்கின்றன.
5: உங்கள் கணக்கின் கடவுச்சொல்லை மறந்துவிட்டால், கடவுச்சொல்லை மீட்டமைக்கலாம். இதற்கு, இபிஎஃப்ஓ உறுப்பினர் இ-சேவை இணையதளத்திற்கு https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/) செல்லவும்.