Tamil News Live Update: இலங்கை பிரதமருடன் இந்திய தூதர் சந்திப்பு

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110.85 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 100.94 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

IPL 2022: மும்மை அணி வெற்றி!

ஐபிஎல் : சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. முதலில் ஆடிய சென்னை 15.5 ஓவரில் 97 ரன்களுக்கு சுருண்டது. 98 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 14.5 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.

Tamil news live update

இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு!

இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சே முன்னிலையில், இலங்கையின் 26வது பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். இவர் ஏற்கனவே 5 முறை இலங்கையின் பிரதமராக பதவி வகித்தவர்.

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்கும் சவாலை ஏற்றுக்கொண்டு உள்ளேன்; அதை நிச்சயம் நிறைவேற்றுவேன். இந்தியா உடனான உறவு மேலும் வலுப்படுத்தப்படும். புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே!

இலங்கை ஊரடங்கில் தளர்வு!

இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கில் தளர்வு விதிக்கப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. இன்று காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்படும். இன்று பிற்பகல் 2 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு மீண்டும் அமலாகும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

வட கொரியாவில் கொரோனா தொற்றால் முதல் உயிரிழப்பு!

வட கொரியாவில் கொரோனா தொற்றால் முதல் முறையாக ஒருவர் உயிரிழந்தாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. உயிரிழந்தவர் ‘ஒமிக்ரான்’ வகை மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர் என வட கொரியா ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Live Updates
13:15 (IST) 13 May 2022
வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் சதீஷ்குமார் கொலை வழக்கு

பிரபல வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் சதீஷ்குமார் கொலை வழக்கு விசாரணையை சிபிசிஐடி தொடர்ந்து நடத்த வேண்டும். விசாரணை குறித்த நிலை அறிக்கையை 4 மாதங்களுக்கு ஒருமுறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் விசாரணையை சிபிசிஐடி டிஐஜி கண்காணிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

12:43 (IST) 13 May 2022
இலங்கை பிரதமருடன் இந்திய தூதர் சந்திப்பு

இலங்கை நெருக்கடிக்கு இடையே புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே உடன் இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்கலே சந்தித்து பேசியுள்ளார்.

12:28 (IST) 13 May 2022
நீட் முதுநிலை தேர்வை ஒத்திவைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது – உச்ச நீதிமன்றம்

மருத்துவ மாணவர்கள் தாக்கல் செய்த பொதுநல மனு மீது நீட் முதுநிலை தேர்வை ஒத்திவைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.*நீட் முதுநிலை தேர்வை தள்ளிவைத்தால் உள்ளுறை மருத்துவ சேவை பாதிக்கப்படும் என்று மத்திய அரசு வாதம் செய்துள்ளது.

12:09 (IST) 13 May 2022
ஓடிக்கொண்டிருந்த காரில் திடீரென தீப்பற்றி விபத்து

சென்னை, குரோம்பேட்டையில் ஓடிக்கொண்டிருந்த காரில் திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது. சுதாரித்துக்கொண்ட தம்பதி பாதுகாப்பாக வெளியேறியதால் உயிர் தப்பினர்

12:08 (IST) 13 May 2022
ஸ்டாலினே நினைத்தாலும் வேளாண்மைக்கு எதிராக எதையும் செய்ய முடியாது – இபிஎஸ்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை அறிவித்தது அதிமுக அரசு முதல்வர் ஸ்டாலினே நினைத்தாலும் வேளாண்மைக்கு எதிரான எந்த தொழிலையும் அனுமதிக்க முடியாது என்று சேலத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில் கூறியுள்ளார்

11:36 (IST) 13 May 2022
நாங்கள் இந்தி உட்பட எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல – அமைச்சர் பொன்முடி

இருமொழிக் கொள்கையே தமிழ்நாடு அரசின் கொள்கை. தமிழக மாணவர்கள் எந்த மொழியையும் கற்க தயாராக உள்ளனர். தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை ஆளுநருக்கு தெரியப்படுத்தவே இதை கூறுகிறேன். நாங்கள் இந்தி உட்பட எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

11:35 (IST) 13 May 2022
₨35.82 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்களை திறந்து வைத்த முதல்வர்

சென்னை, தலைமைச் செயலகத்தில் ₨35.82 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்களை காணொலி வாயிலாக திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மேலும் கலை, இலக்கிய மேம்பாட்டு சங்கம் சார்பில் தேர்வு செய்யப்பட்ட 21 சிறந்த எழுத்தாளர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

10:59 (IST) 13 May 2022
தாம்பரம் – வேளச்சேரி மேம்பாலம் திறப்பு!

செங்கல்பட்டு, மேடவாக்கம் பகுதியில், நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் ரூ. 95.21 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட தாம்பரம் – வேளச்சேரி மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

10:58 (IST) 13 May 2022
திமுக பொய் தகவல்.. ஈபிஎஸ் விமர்சனம்!

சொத்து வரி உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். திமுக 70% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக பொய்யாக தகவல் என ஈபிஎஸ் விமர்சித்துள்ளார்.

10:34 (IST) 13 May 2022
பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,200 வரை மிச்சம்!

இலவச பேருந்து திட்டத்தால் பெண்களுக்கு சராசரியாக மாதந்தோறும் ரூ. 600 முதல் ரூ.1,200 வரை மிச்சமாகிறது. வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்து நன்மை செய்யும் ஆட்சியாக திமுக ஆட்சி- தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா இல்ல திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

10:22 (IST) 13 May 2022
தங்கம் விலை குறைவு!

சென்னையில் இன்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.472 குறைந்து ரூ.38,112க்கும், கிராமுக்கு ரூ. 4,764க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

10:17 (IST) 13 May 2022
ரேஷன் கார்டு குறைதீர் முகாம்!

சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நாளை (மே.14) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, மாதாந்திர ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

09:38 (IST) 13 May 2022
நாளை முதல் கோடை விடுமுறை!

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இன்றுடன் தேர்வுகள் முடியும் நிலையில், நாளை முதல் கோடை விடுமுறை தொடங்க உள்ளது. ஜூன் 13 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

09:38 (IST) 13 May 2022
2,841 பேருக்கு கொரோனா!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,841 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தொற்றுக்கு ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 3,295 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

09:38 (IST) 13 May 2022
காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு கூட்டம்!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு கூட்டம் இன்று தொடங்குகிறது. 3 நாட்கள் நடைபெறும் கூட்டத்தில் 2024 மக்களவை தேர்தல், காங்கிரஸ் உள்கட்சி தேர்தல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இதில் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்பட 430 நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

09:02 (IST) 13 May 2022
சேலத்தில் ஏற்காடு கோடை விழா!

சேலத்தில் ஏற்காடு கோடை விழா மே 26ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறும். ஏற்காடு கோடை விழாவிற்காக சேலத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார்.

08:45 (IST) 13 May 2022
நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது விவாதம்!

இலங்கை அதிபருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது வரும் 17ஆம் தேதி விவாதம் நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

08:45 (IST) 13 May 2022
புதிய மேம்பாலம் திறப்பு!

செங்கல்பட்டு, மேடவாக்கம் பகுதியில் தாம்பரம் – வேளச்சேரி மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

08:23 (IST) 13 May 2022
8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, நாட்டின் பணவீக்கம் உயர்வு!

கடும் விலைவாசி உயர்வு காரணமாக, ஏப்ரல் மாதத்தில், நாட்டின் பணவீக்கம் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 7.79 சதவீதமாக உயர்ந்துள்ளதாக, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

08:22 (IST) 13 May 2022
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

08:22 (IST) 13 May 2022
மலைக்கோட்டை கோவில் சித்திரை தேரோட்டம்!

திருச்சி, மலைக்கோட்டை தாயுமானசாமி கோவில் சித்திரை தேரோட்டம் தொடங்கியது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.