WhatsApp Warning: மோசடியில் இது புதுசு – எச்சரிக்கும் வாட்ஸ்அப்?

Online Scam:
வாட்ஸ்அப்
மிகவும் பிரபலமான செய்தி பகிரும் தளமாக விளங்குகிறது. இது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தொடர்பில் இருப்பதை மிகவும் எளிதாக்குகிறது. இதன் விளைவாக, மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் பயனர்களின் கணக்குகளை உன்னிப்பாகக் கண்காணிக்கிறார்கள்.

தற்போது அப்படி ஒரு புதுவித மோசடி குறித்து தான் சில முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்ஸ்டாகிராம் பயனருக்கு டைவர்ட் கால் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப்பில் புதிய மோசடி தொடங்கியுள்ளது என்றும் பயனர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் தனது அனுபவத்தை பதிவிட்டுள்ளார்.

தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்ததாக அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இணைய இணைப்பு குறித்து தனக்கு இருந்த புகார் குறித்த அழைப்பு என்று அந்த அழைப்பு மேற்கொள்ளப்பட்டது. அதில் இன்ஸ்டாகிராம் பயனர் தனது தந்தை வீட்டில் இல்லை என்று அழைப்பாளரிடம் கூறியுள்ளார்.

Android Phones: ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு எச்சரிக்கை – ஏன் தெரியுமா?

மோசடி எண்

பயனர் அழைப்பைத் துண்டித்தவுடன், நீங்கள் ஒரு எண்ணை டயல் செய்ய வேண்டும் என்றும், “401” என்ற எண்ணை உடனடியாக டயல் செய்யும்படி மீண்டும் அழைத்து அந்த அடையாளம் தெரியாத மோசடி நபர் கூறியுள்ளார். தொலைபேசியை துண்டித்த 10 நிமிடங்களுக்குப் பிறகு, Instagram பயனருக்கு வாட்ஸ்அப்பில் இருந்து ஒரு செய்தி வந்தது.

அதாவது, “புதிய சாதனத்தில் PIN மாற்றி அமைக்கப்பட்டுள்ளது,” என்று அதில் இருந்தது. தொடர்ந்து மோசடி நபர்களின் மொபைல் மற்றும் பிசிக்களில் இருந்து வாட்ஸ்அப் லாக் செய்யப்பட்டது. “401” எண்ணை டயல் செய்த பிறகு, அனைத்து அழைப்புகளும் அந்த எண்ணுக்குத் திருப்பி விடப்படுவதை பயனர் உணர்ந்திருக்கிறார்.

Google Search: கூகுளில் இவற்றை ஒருபோதும் தேடாதீர்கள்!

மொத்தமாக லாக் ஆன வாட்ஸ்அப்

இதை சாதகமாக பயன்படுத்தி, மோசடி செய்பவர்கள் பயனர்களின் வாட்ஸ்அப்பில் உள்நுழைந்தனர். அதன்பிறகு, சுமார் 50 தொடர்புகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி பணம் கேட்டுள்ளார். இந்தத் தொடர்புகளில் இருந்த பலர் அவசியத்தை உணர்ந்து, மோசடி செய்பவர்கள் குறிப்பிட்ட UPI ஐடிக்கு பணத்தை மாற்றியுள்ளனர்.

சுதாரித்துக் கொண்ட இன்ஸ்டாகிராம் பயனர், சேவை மையத்தை அணுகி தனது சிம் கார்டை லாக் செய்து விட்டார். இருப்பினும், வாட்ஸ்அப் கணக்கை லாக் செய்ய அவரால் முடியவில்லை. ஏனெனில், மோசடி செய்பவர்கள் அதில் இரண்டு காரணி பாதுகாப்பு அங்கீகாரத்தை நிறுவியுள்ளனர்.

சுமார், 7 நாள்களுக்குப் பிறகு, எனக்கு மீண்டும் வாட்ஸ்அப் அணுகல் கிடைத்தது என்று தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்திருந்த பயனர், இந்த மோசடி குறித்து பிற பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே வாட்ஸ்அப் பயனர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

பயனர்கள் யாரும், “401” முதற்கொண்டு எந்த குறியீடு எண்களையும் டயல் செய்ய வேண்டாம் என்று இன்ஸ்டாகிராம் பயனர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், வாட்ஸ்அப்பில் 2 Step Authentication-ஐ பயன்படுத்துமாறும், தெரியாத லிங்குகளைக் கிளிக் செய்ய வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலதிக செய்திகள்:

TikTok: விண்வெளியில் டிக்டாக் வெளியிட்ட பெண் – வைரல் வீடியோ!Google I/O 2022: பிக்சல் வாட்ச், பிக்சல் 6A, பிக்சல் பட்ஸ் என நிறைய இருக்கு – கூகுள் நிகழ்வுElon Musk: ட்விட்டரை ஒப்படைக்கிறோன்; ஆனால் அதற்கு நான் இறக்க வேண்டும்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.