பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் பொது போக்குவரத்துக்காக ஆயிரத்து 500 தாழ்தள மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்த அம்மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
டெல்லியில் இருந்து உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட மொத்தம் 11 வழித்தடங்களில் 75 பேருந்துகளை இயக்க டெல்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதே போல, மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் மற்றும் பேட்டரி மாற்றும் நிலையங்களை அமைக்கவும் முடிவு செய்துள்ளது.
மேலும், மின்சார பேருந்துகளை இயக்க ஒப்பந்த அடிப்படையில் பயிற்சி பெறும் பெண்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை 6 ஆயிரத்தில் இருந்து 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தவும் டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.