மும்பை,
ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது.நேற்று நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு – பஞ்சாப் அணிகள் மோதின .
இந்த போட்டியில் பஞ்சாப் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .இந்த போட்டியில் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தடுமாற்றம் இந்த போட்டியிலும் தொடர்ந்தது.
நல்ல தொடக்க கிடைத்த போதும் அதனை பெரிய அளவில் மாற்ற தவறினார் .2 பவுண்டரி ,1 சிக்சருடன் விராட் கோலி 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு இந்த போட்டியில், எதிரணியான பஞ்சாப் கிங்ஸ் அணி இன்ஸ்டாகிராமில் சுவாரஸியமாக பதிவிட்டுள்ளது .
அந்த பதிவில் ;
விராட் கோலி, களத்தில் நீடிக்கும் வரை நாங்கள் அதை ரசித்தோம். அதிர்ஷ்டம் விரைவில் உங்கள் பக்கம் திரும்பும் என்று நம்புகிறோம்’ என பதிவில் குறிப்பிட்டது பஞ்சாப் அணி.