உக்ரைனில் கலகம் செய்த ரஷ்ய வீரர்கள் பலர் ஆடைகள் இல்லாமல், கைகால்கள் கட்டப்பட்டு, லொறிகளில் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
உக்ரைனில் ரஷ்ய வீரர்கள் பலர் கலகத்தில் ஈடுபடுவதாகவும், போருக்கு தயங்குவதாகவும் தகவல் வெளியான நிலையில், சிறப்பு தளபதி ஒருவரை விளாடிமிர் புடின் நிர்வாகம் உக்ரைனுக்கு அனுப்பி வைத்தது.
குறித்த தளபதியின் உத்தரவை அடுத்தே, கலகத்தில் ஈடுபட்ட ரஷ்ய வீரர்கள் ஆடை இல்லாமல், கைகால்கள் கட்டப்பட்டு குண்டுகட்டாக லொறிகளில் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இதனிடையே, உக்ரைன் மீதான படையெடுப்பை கடுமையாக விமர்சித்த ரஷ்ய வீரர் ஒருவர், விளாடிமிர் புடினை வசைபாடிய ஒடியோவும் உக்ரைன் அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ளது.
மூன்றே நாட்களில் உக்ரைன் தலைநகரை கைப்பற்றலாம் என புறப்பட்ட ரஷ்ய துருப்புகள், 12வது வாரமாக உக்ரைனில் போரிட்டு வருகிறது.
ஆனால், தற்போது பல ரஷ்ய வீரர்களும் சலிப்படைந்துள்ளதாகவும், போரிட தயங்குவதாகவும், அதனாலையே ரஷ்யா கடும் பின்னடைவை எதிர்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
விளாடிமிர் புடினுக்கு என்ன நோய்? அம்பலமான இரகசியம்
உக்ரைன் படையெடுப்பில் முழுமையாக பயிற்சி பெறாத இளம்வயது வீரர்களை மட்டுமே ரஷ்யா களமிறக்கியுள்ளதால், பலர் கலகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், பல அதிகாரிகள் தங்கள் பிரிவு வீரர்களை உக்ரைன் துருப்புகளின் தாக்குதலுக்கு இரையாக்க விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த முக்கிய தளபதி, அதிகாரிகளை கடுமையாக சாடியதுடன், போருக்கு தயாராகாத வீரர்களை உடனடியாக வெளியேற்ற உத்தரவிட்டுள்ளார்.
இதன் ஒருபகுதியாகவே, ரஷ்ய வீரர்கள் ஆடைகள் பறிக்கப்பட்டு, நிர்வாணமாக லொறிகளில் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
ஆனால் அந்த வீரர்கள் எங்கே கொண்டு செல்லப்பட்டனர் என்ற தகவல் வெளியிடப்படவில்லை என்றே கூறப்படுகிறது.