இடியாப்ப சிக்கலில் ஆர்பிஐ.. வட்டியை அதிகரித்தால் பிரச்சனை தான்.. எச்சரிக்கும் டிவி சோமநாதன்

சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வரும் பணவீக்கத்தின் மத்தியில் மத்திய வங்கியானது கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிரடியாக வட்டி விகிதத்தினை உயர்த்தியது.

இந்த விகிதமானது வரவிருக்கும் ரிசர்வ் வங்கி கூட்டத்திலும் அதிகரிக்கப்படலாம் என்ற யூக நிலையே இருந்து வருகின்றது.

இதற்கிடையில் நிதி விவகாரங்களில் பரந்த அனுபவம் கொண்ட நிதிச் செயலாளர் டிவி சோமநாதன், மத்திய வங்கி வட்டி விகிதங்களை அதிகரித்தால்,வளர்ச்சி விகிதம் குறைய வாய்ப்புள்ளதாக (CNBC TV18) எச்சரித்துள்ளார்.

குட் நியூஸ்: எல்ஐசி பங்குகளின் வெளியீட்டு விலை என்ன தெரியுமா…?

வட்டி அதிகரிப்பை பரிசீலிக்கலாம்

வட்டி அதிகரிப்பை பரிசீலிக்கலாம்

இந்திய மத்திய வங்கியானது ஜூன் கொள்கை கூட்டத்தில் நடப்பு நிதியாண்டிற்காக பணவீக்க இலக்கினை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. வட்டி விகிதம் உயர்வு பற்றியும் பரிசீலிக்கலாம் என்ற தகவகள் வெளியாகி வருகின்றது.

ஏற்கனவே பணவீக்கத்தினை கருத்தில் கொண்டு தான் ரிசர்வ் வங்கியானது, திடீரென ரெப்போ விகித்தத்தினை 40 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, 4.40 சதவீதமாக அதிகரித்தது. இந்த நிலையில் நிதி செயலரின் அறிவிப்பு மேற்கொண்டு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கடனுக்கான வட்டி அதிகரிக்கலாம்

கடனுக்கான வட்டி அதிகரிக்கலாம்

ரெப்போ விகித அதிகரிப்பானது வங்கிகளை கடனுக்கான வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம். ஆக இதன் காரணமாக கடன் களுக்கான வட்டி விகிதம் என்பது அதிகரிக்கலாம். இதன் காரணமாக கடன் வளர்ச்சி விகிதம் சரிவினைக் காணலாம். மேலும் ஏற்கனவே கடன் வாங்கியவர்களை அதிகளவிலான வட்டி விகிதத்தினை செலுத்த வழிவகுக்கலாம்.

நிறுவனங்கள் பாதிக்கலாம்
 

நிறுவனங்கள் பாதிக்கலாம்

புதிய கடன் வளர்ச்சி விகிதமானது சரியலாம். குறிப்பாக நிறுவனங்கள் முன்பை விட அதிக வட்டி விகிதம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்படலாம். இது நிறுவனங்களின் மார்ஜின் விகிதத்தினை பாதிக்கலாம்.

இதே தனி நபர் கடன், வீட்டுக்கடன், வாகன கடன் என அனைத்து பிரிவிலும் எதிரொலிக்கும்போது, மக்களின் ஆர்வம் குறையலாம். இதனால் தேவை சரியலாம். இது ஒட்டு மொத்த பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

வட்டி அதிகரிப்பு சரியான தீர்வல்ல?

வட்டி அதிகரிப்பு சரியான தீர்வல்ல?

அதேசமயம் பணவீக்கத்தினை கட்டுப்படுத்தாவிட்டாலும் அது பொருளாதாரத்தில் மோசமான தாக்கத்தினை ஏற்படுத்த கூடும். ஆக மத்திய வங்கியானது வட்டி விகித அதிகரிப்பினை தவிர்க்க முடியாது என்பதும் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. எப்படியிருப்பினும் வட்டி விகித அதிகரிப்பு மட்டுமே பணவீக்கத்தினை கட்டுக்குள் வைக்க பயன்படாது என்கின்றனர் நிபுணர்கள்.

வரியை குறைக்க வேண்டும்

வரியை குறைக்க வேண்டும்

வரிகளை குறைக்கலாம். சப்ளையை எளிதில் கிடைக்கும் வகையில் மாற்று ஏற்பாடுகளை செய்யலாம். இது பணவீக்கத்தினை எளிதில் கட்டுக்குள் கொண்டு வர உதவிகரமாக இருக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக கச்சா எண்ணெய் இறக்குமதி, சமையல் எண்ணெய் இறக்குமதி, ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், மருத்துவ மூலதன பொருட்கள் உள்ளிட்டவற்றை மாற்று ஏற்பாடினை செய்யலாம். இதற்காக நிறுவனங்கள் அரசின் ஆத்ம நிர்பார் திட்டம், பிஎல்ஐ திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறுகின்றனர். இது மேக் இன் இந்தியாவினையும் ஊக்கப்படும். அதேசமயம் உற்பத்தியினையும் அதிகரிகக் வழிவகுக்கும். இது வளர்ச்சியினையும் மேம்படுத்தும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Growth may slow if RBI raises interest rates; finance secretary

Finance Secretary TV Somanathan said the country’s growth rate is likely to slow if the central bank raises interest rates.

Story first published: Friday, May 13, 2022, 14:03 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.