இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலை.. எங்கு, எப்போது. தொடங்கப்படும்?

இந்தியாவில் செமிகண்டக்டர் சிப்ஸ் தொழிற்சாலையை அமைக்க பல பன்னாட்டு நிறுவனங்கள் மத்திய, மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இவை வெற்றியடைந்தால் இந்த அண்டின் இறுதிக்குள் இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் சிப்ஸ் தொழிற்சாலை தொடங்கப்படும்.

சென்னையில் ரூ.1000 கோடி முதலீடு செய்யும் அசோக் லேலண்ட்.. மாபெரும் EV தொழிற்சாலை..!

எங்கு?

எங்கு?

தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம் லிமிடெட் (TSMC), டாடா குழுமம், வேதாந்தா -ஃபாக்ஸ்கான் கூட்டு நிறுவனம் என பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் உத்திர பிரதேசம் ஆகிய மாநில அரசுகள் செமிகண்டக்டர் சிப்ஸ் தொழிற்சாலை அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

எலக்ட்ரானிக் சிப் மற்றும் டிஸ்பிளே

எலக்ட்ரானிக் சிப் மற்றும் டிஸ்பிளே

இந்தியாவில் 1 லட்சத்து 53 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் எலக்ட்ரானிக் சிப் மற்றும் டிஸ்பிளே தொழிற்சாலைகளை அமைக்க 5 நிறுவனங்கள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

 வேதாந்தா - ஃபாக்ஸ்கான்
 

வேதாந்தா – ஃபாக்ஸ்கான்

வேதாந்தா -ஃபாக்ஸ்கான் கூட்டு நிறுவனம், ஐஜிஎஸ்எஸ் வெஞ்ச்சர்ஸ் மற்றும் ஐஎஸ்எம்ஸி நிறுவனங்கள் 13.6 பில்லியன் டாலர் முதலீட்டில் சிப் தொழிற்சாலை அமைக்க திட்டம் தீட்டியுள்ளன. அதற்கு அரசு அறிவித்த செமிகான் திட்டத்தின் கிழ் 5.6 பில்லியன் டாலர் மானியத்தை வழங்கி ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்கள்.

உலகளாவிய செமிகண்டக்டர் தயாரிப்பாளர்களை ஈர்க்க, விநியோகச் சங்கிலிகளை இணைக்க, சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க அரசும் தீவிரமாக முயற்ச்சித்து வருகிறது.

 சிப் தயாரிக்கத் தேவையான முக்கிய வசதிகள்

சிப் தயாரிக்கத் தேவையான முக்கிய வசதிகள்

சிப்களை இந்தியாவில் உருவாக்க சீரான மின்சாரம், உயர்தர நீர், விமானம் அல்லது துறைமுகத்துடன் நெருங்கிய இணைப்பு மற்றும் திறமையான பணியாளர்கள் தவிர இரசாயனங்கள் மற்றும் மூலப்பொருட்களின் கிடைக்கும் தன்மை உள்ளிட்டைவை முக்கியமான தேவையாக உள்ளது.

மின்சாரப் பிரச்சனை

மின்சாரப் பிரச்சனை

இந்தியாவில் கோடைக்காலம் என்றால் மின்சார சேவையில் பெரும் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இந்த ஆண்டு நிலக்கரி பற்றாக்குறையால் மின்சார சேவை பாதிக்கப்பட்டது. அது இப்போது சரி செய்யப்பட்டுள்ளது.

திறன் மேம்பாடு

திறன் மேம்பாடு

சிப் உற்பத்திக்குத் தேவையான திறன் படைத்த பட்டதாரிகளை உருவாக்க, ஐஐடி ஹைதராபாத்தின் பி.டெக் செமி கண்டக்டர் பாடத்திட்டத்தை மாற்றுவது குறித்து AICTE விவாதித்து வருகிறது. எனவே விரைவில் இந்தியாவில் செமிகண்டக்டர் சிப் தயாரிக்கப்படும். அதன் மூலம் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் நம்பப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

India’s First Semiconductor Chip Factory Likely To Start Soon

India’s First Semiconductor Chip Factory Likely To Start Soon | இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் சிப்ஸ் தொழிற்சாலை எங்கு எப்போது தொடங்கப்படும்?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.