இரத்தினபுரி மாவட்டத்தில் பெய்துவரும் பலத்த மழை தொடர்ந்தால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
களுகங்கவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் அதனை அண்டிய மில்லனிய /மதுராவளை மற்றும் ஹொரணை ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பணிப்பாளர் பொறியியலாளர் எஸ். பீ. சி. சுஜீஸ்வர தெரிவித்தார்.
காலி மாவட்டத்தில் நெலுவ, தவலம, நாகொட, வெலிவிட்டிய திவ்துர மற்றும் பத்தேகம பிரதேச செயலகப் பிரிவுகளில் தாழ்வான பகுதிகள் மற்றும் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.தொடர்ந்து மழை பெய்தால் ஆற்றின் இருபுறமும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது . இதனால் இப்பகுதியிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்வதற்கு தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.