இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த விமானப்படை ஹெலிகாப்டரில் ஏறும் புகைப்படம் வைரல்! அதன் உண்மை தன்மை என்ன?


இலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் மகிந்த ராஜபக்ச விமானப்படை ஹெலிகாப்டரில் ஏறி தப்பி செல்கிறார் என்பது போன்ற புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் அது பொய்யான தகவல் என தெரியவந்துள்ளது.

இலங்கை பிரதமர் பதவியை மகிந்த கடந்த 9ஆம் திகதி ராஜினாமா செய்தார்.
இதன் பின்னர் சமீபத்தில் மகிந்த விமானப்படை ஹெலிகாப்டரில் ஏறி நாட்டில் இருந்து தப்புகிறார் என ஒரு புகைப்படத்தை சிலர் சமூகவலைதளங்களில் வெளியிட்டனர்.
அந்த பதிவில், இப்போது நடப்பதை நினைத்து வருத்தமும் வெட்கமும் அடைகிறேன்.

இந்த திருடர்கள் எங்கு தப்பிச் சென்றாலும் கர்மாவிலிருந்து தப்ப மாட்டார்கள்.
அவர்களை சும்மா விடுகிறோமா? இராணுவமும் காவல்துறையும் ஒரு பக்கத்தைத் தேர்ந்தெடுக்கும் நேரம் இது என்று நினைக்கிறேன்.

இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த விமானப்படை ஹெலிகாப்டரில் ஏறும் புகைப்படம் வைரல்! அதன் உண்மை தன்மை என்ன?

கோட்டாபய பதவி விலக வேண்டும் என்போர் உணர்வுடன் உடன்படுகிறேன்! ஆனால்…பிரதமர் ரணில் முக்கிய தகவல்

நீங்கள் அனைவரும் நாட்டு மக்களுடன் இருக்கிறீர்களா அல்லது பயங்கரவாதிகளின் பக்கம் இருக்கிறீர்களா? என பதிவுகள் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இப்புகைப்படத்தின் உண்மை தன்மையை
AFP வெளிப்படுத்தியுள்ளது.

அதன்படி இந்த புகைப்படமானது கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி எடுக்கப்பட்டிருக்கிறது.
அப்போது நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மகிந்த தோல்வியடைந்த நிலையில் கொழும்புவில் இருந்து ஹெலிகாப்டரில் Tangalle நகருக்கு குடும்பத்தாருடன் சென்றிருக்கிறார்.

அந்த புகைப்படத்தை தான் தற்போது வேறு மாதிரியான பதிவுகளை போட்டு சிலர் சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.