இலங்கை வன்முறையில் ஆளும் கட்சி எம்.பி மரணமடைந்தது தொடர்பில் எம்.பி. நாமல் ராஜபக்ச திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த 9ம் திகதி இலங்கையில் தலைநகர் கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் அமைதி போராட்டகாரர்கள் மீது அரசாங்க ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து நாடு முழுவதும் கலவரம் வெடித்தது.
நிட்டம்புவவில் இடம்பெற்ற வன்முறையில் ஆளும் கட்சி எம்.பி.அமரகீர்த்தி அத்துகோரள பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நிட்டம்புவவில் எம்.பி.அமரகீர்த்தி அத்துகோரள தனது காரைத் தடுத்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் படுகாயமடைந்தனர்.
பின்னர் அருகில் உள்ள கட்டிடத்தில் எம்.பி.அமரகீர்த்தி அத்துகோரள தஞ்சம் அடையந்ததாகவும், பின்னர் அந்த கட்டிடத்திலிருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
எம்.பி.அமரகீர்த்தி அத்துகோரள துப்பாக்கி மூலம் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், எம்.பி.அமரகீர்த்தி அத்துகோரள தற்கொலை செய்துக்கொள்ளவில்லை என்பது பிரேத பரிசோதனையில் நிரூபணமாகியுள்ளதாக எம்.பி.நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் ட்விட்டரில் பதிவிட்டதாவது,
மாண்புமிகு எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரள மரணம் முதலில் தற்கொலை என தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், ஆனால் இப்போது மருத்துவ பரிசோதனைகளில் வேறுவிதமாக நிகழ்ந்தது என்பது நிரூபணமாகியுள்ளது.
எந்த அடிப்படையில் இது தற்கொலையாக சித்தரிக்கப்பட்டது என்ற கேள்விகள் எழுகின்றன மற்றும் தற்கொலை என்று ஊடகங்களுக்கு தெரிவித்தது யார்? என நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையில் புதிய அமைச்சர்களை நியமித்தார் அதிபர் கோட்டாபய ராஜபக்ச! வெளியான முழு விவரம்