உக்ரைன் – ரஷ்யா போரால் இந்த வாயில்லா ஜீவனுக்கு ஏற்படும் பிரச்சனையைப் பார்த்தீங்களா..?!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் மூலம் மக்கள் பல வழிகளில் பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில், தற்போது கடல் வாழ் உயிரினங்களுக்குப் பாதிப்பு ஏற்பட உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

3 மாதத்தில் ரூ.1506 கோடி லாபம் பார்த்த டெக் மகேந்திரா.. முதலீட்டாளர்களுக்கும் சர்பிரைஸ் உண்டு?

ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக ஏற்கனவே உணவு பொருட்கள் விநியோகம், எரிபொருள் ஏற்றுமதி, விநியோக சங்கிலி எனப் பல பிரச்சனைகள் உருவாகியிருக்கும் நிலையில் தற்போது கடல் வாழ் உயிரினங்களுக்குப் பாதிப்பு ஏற்பட உள்ளது.

ரஷ்யா - உக்ரைன் போர்

ரஷ்யா – உக்ரைன் போர்

ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக இப்பகுதியில் ஒலி மாசுபாடு அதிகளவில் உள்ளது. இதன் மூலம் கடல் வாழ் உயிரினங்கள் அதிகளவில் பாதிக்கப்படலாம் மற்றும் டால்பின்களின் உயிர் வாழ்வதையும் அச்சுறுத்தும் என ஆய்வுகள் கூறுகிறது.

ரஷ்ய படைகள்

ரஷ்ய படைகள்

ரஷ்ய படைகள் உக்ரைனை ஆக்கிரமித்ததிலிருந்து கருங்கடலின் கரையோரங்களில் சிக்கித் தவிக்கும் அதிக எண்ணிக்கையிலான செட்டேசியன் ( cetacean – திமிங்கிலங்கள், டால்பின்கள் மற்றும் போர்போயிஸ்கள்) ஒலி மாசுபாடு காரணமாக அதிகளவில் பாதிக்கப்பட்டு வருவதாகத் துருக்கி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

டால்பின்கள்
 

டால்பின்கள்

ரஷ்யப் படைகள் உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடங்கிக் கிட்டத்தட்ட மூன்று மாதங்களை நெருங்கும் வேளையில் உக்ரைன் நாட்டின் வளங்கள் அதிகளவில் அழிக்கப்பட்டு உள்ளது. இரு நாடுகளிலும் ஆயிரக்கணக்கான இறப்புகள், அழிக்கப்பட்ட வீடுகள், மாசுபட்ட மண் போன்ற பல பிரச்சனைகளை மக்கள் எதிர்கொண்டு வரும் நிலையில் இந்தப் போர் விலங்குகள் குறிப்பாக, டால்பின்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கி கடல் ஆராய்ச்சி

துருக்கி கடல் ஆராய்ச்சி

துருக்கி கடல் ஆராய்ச்சி அறக்கட்டளையின் (துடாவ்) ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, பிப்ரவரி 24 அன்று தொடங்கிய உக்ரைனின் ரஷ்ய படையெடுப்பிலிருந்து கருங்கடலை ஒட்டிய துருக்கி கடற்கரைகளில் 80 டால்பின்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 ரஷ்ய கப்பல்

ரஷ்ய கப்பல்

இந்த அசாதாரணமான அதிக எண்ணிக்கையானது ரஷ்ய கடற்படைக் கப்பல்களின் இருப்பு மற்றும் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளால் விளக்கப்படலாம். இவற்றில் பாதி விலங்குகள் மீன்பிடி வலையில் சிக்கி இறந்து கிடந்தன என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Russia-Ukraine War Threaten Dolphins livehood says Tudav

Russia-Ukraine War Threaten Dolphins livehood says Tudav உக்ரைன் – ரஷ்யா போரால் இந்த வாயில்லா ஜீவனுக்கு ஏற்படும் பிரச்சனையைப் பார்த்தீங்களா..?!

Story first published: Saturday, May 14, 2022, 20:54 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.