பொதுவாக முகம் போன்றே கைகளும், கால்களும் கூட சூரியனின் நேரடி புற ஊதாக் கதிர்களை பாதிக்கின்றன.
இது நேரடியாக வெளிப்படும் போது மெலனின் உற்பத்தியில் அதிகரிப்பு இருக்கும். இது இருண்ட நிறத்தை உண்டாக்கும்.
முகத்தை காட்டிலும் கைகளும் கால்களும் கருப்பாக இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
- நல்ல பிஞ்சு வெள்ளரிக்காய் அரைத்து அத்துடன் சிறிது தேன் சேர்த்து கை மற்றும் கால்களில் தடவி வர வேண்டும். இப்படி இரண்டு வாரங்கள் தொடர்ந்து செய்து வர கை கால்களில் உள்ள கருமை நீங்கி வெள்ளையாகும்.
- ஆலிவ் ஆயில் என்பது சிறிது விலை உயர்வு தான். இருந்தாலும் அதில் இயற்கையாகவே மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. ஆலிவ் ஆயில் கொண்டு தினமும் கை மற்றும் கால்களில் மசாஜ் செய்துவர கருமை நிறம் மறைந்து விடும்.
- ஆலிவ் ஆயிலுடன் சிறிது குங்குமப் பூவை சேர்த்துக் கொண்டால் இன்னும் சிறப்பு. சருமம் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும் .
- இளநீர் மிகவும் மருத்துவ குணம் கொண்டது. இளநீரை தினமும் அல்லது வாரம் இருமுறையோ கை, கால்களில் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வர உங்களது கை மற்றும் கால்கள் வெண்மை அடையும்.
- தயிரை தினமும் கை மற்றும் கால்களில் தடவி மசாஜ் செய்து வர சருமம் வறட்சியாக இருப்பதிலிருந்து விடை பெறலாம்.
- எலுமிச்சம்பழம் மற்றும் வெள்ளரிக்காய் சாறுகளை ஒன்றாக சேர்த்து கலந்து கை கால்களில் தடவி ஊறவைத்து கழுவ வேண்டும். அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால் சருமத்தில் உள்ள கருமை மறையும்.
- தக்காளியை தினமும் அரைத்து அதனை கை கால்களில் தடவி ஊற வைத்து பின்பு கழுவி வர வேண்டும். இப்படி தினமும் செய்வதன் மூலம் சரும நிறத்தை மேம்படுத்தும்
- வாரத்திற்கு 2 முறை முட்டையின் வெள்ளைக்கருவை நன்கு அடித்து, கை, கால்களில் தடவி உலர வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். இதன் மூலம் சருமத்தில் உள்ள கருமை விரைவில் அகலும்.
- ஓட்ஸை பொடி செய்து வைத்துக்கொண்டு அதனுடன் தயிர் மற்றும் தக்காளி சாறு சேர்த்து கை மற்றும் கால்களில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து பின்பு கழுவினால் சருமத்தில் உள்ள கருமை நிறம் நீங்கி இறந்த செல்களும் போய்விடும்
- மசித்த பப்பாளி பழத்தை பால் பவுடர் மற்றும் தேன் சேர்த்து கலந்து தடவி நன்கு ஊற வைத்து கழுவ, சருமத்தின் நிறம் மேம்பட்டிருப்பதைக் காணலாம்.