புனே:
ஐ.பி.எல். தொடரின் 61-வது லீக் ஆட்டம் புனேவில் இன்று நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை எடுத்தது.
தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் அய்யர் 7 ரன்னில் அவுட்டானார். நிதிஷ் ரானா 26 ரன்னிலும், அஜிங்கியா ரஹானே 28 ரன்னிலும், கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் 15 ரன்னிலும், ரிங்கு சிங் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
6வது விக்கெட்டுக்கு சேர்ந்த சாம் பில்லிங்ஸ், ஆண்ட்ரூ ரசல் ஜோடி 63 ரன்கள் சேர்த்தது. ஆண்ட்ரூ ரசல் அதிகபட்சமாக 49 ரன்களை எடுத்தார். கடைசி ஓவரில் அதிரடியாக 3 சிக்சர்களை விளாசினார்.
இதையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்து விளையாடிய ஐதராபாத் அணியில் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 43 ரன்கள் அடித்தார்.
கேப்டன் வில்லியம்சன், ராகுல் திரிபாதியும் தலா 9 ரன்னுடன் வெளியேறினர். மார்க்ரம் 32 ரன் எடுத்தார்.
ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் அடித்தது. இதனால் கொல்கத்தா அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அந்த அணி சார்பில் அதிகபட்சமாக ரசல் 3 விக்கெட்களும், டிம் சௌதி 2 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதையும் படியுங்கள்…
இதுதான் எனது கடைசி ஐபிஎல் தொடர்- அறிவித்துவிட்டு பதிவை நீக்கிய கிரிக்கெட் வீரர்